
உள் மற்றும் வெளியில் உள்ள துரோகிகளின் சதி செயல்களுக்கு பெர்சாத்து ஒருபோதும் அடிபணியாது என அக்கட்சியின் உச்ச மன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ சஞ்சீவன் ராமகிருஷ்ணன் கூறினார்.
பெர்சாத்துவின் நம்பிக்கை கூறிய கேப்டன் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் என்பதில் சந்தேகம் இல்லை என்றார் அவர்.
ஆகையால் கட்சியை பலவீனமாக்க முயற்சிக்கும் சதி செயல்களை தாம் நிராகரிப்பதாக அவர் சொன்னார்.
இருப்பினும் அண்மைய காலமாக கட்சியில் உள்ள சில குறிப்பிட்ட தலைவர்கள் கட்சியின் கட்டொழுங்கை மீறி செயல்பட்டு வருவது அச்சத்தை தருவதாக அவர் சொன்னார்.
இவர்கள் கட்சிக்கு வெளியே உள்ள அரசியல் எதிரிகளுடன் கைகோர்த்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
தங்களின் சொந்த அரசியல் நோக்கத்திற்காக இவர்கள் கட்சியை பலவீனமாக முயற்சித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
கட்சிக்கு தொந்தரவாக இருந்து வரும் இவர்களை கட்சி உறுப்பினர்கள் நிராகரிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
ஆகையால் பாராபட்சமின்றி கட்சியின் தலைமைத்துவம் இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இது போன்ற தலைவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டும்.
காரணம் இவர்களின் சதி செயல்கள் தொடர்ந்தால் கட்சியின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை சரிந்து விடும் என்றார் அவர்.
உள் சதியின் காரணமாக ஒரு அரசியல் கட்சி வீழ்ச்சி அடைகிறது என்பதை அரசியல் வரலாறு நிரூபித்துள்ளது.
ஜூலியஸ் சீசரை தமது நெருங்கிய நண்பர் புருட்டஸ் கொலை செய்ததை வரலாறு கூறுகிறது.
அதே போல் முன்னாள் இந்தோனேசிய அதிபர் சுக்கார்னோவை அவரின் உதவியாளர் சுஹோர்த்தோ கவிழ்த்ததை வரலாறு கூறுகிறது.
இந்த வரலாறு திரும்புவதை பெர்சாத்து அனுமதிக்கக் கூடாது என்றார் அவர்.
பதவி ஆசை கொண்டுள்ள தரப்பினர் பெர்சாத்துவை பேரம் பேசுவதே நாம் ஒருபோதும் அனுமதிக்க கூடாது.
பெர்சாத்து கட்சிக்கு டான்ஸ்ரீ முஹிடின் தலைமை வகிக்கும் வரை இக்கட்சி மக்களின் நம்பிக்கையை தொடர்ந்து பெரும் என அவர் சொன்னார்.


