
கிள்ளான் செப் 27
மஹார்டிக்கா புரொடக்க்ஷன்ஸ் நிறுவனத்தின் FASHION IN FRAME இன்டர்நேஷனல் 2025 விருது விழா அண்மையில் கிள்ளான் கிரேண்ட் சென்ரோவில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில் மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த மாடல் அழகிகள், ஒப்பனைக் கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.

இந்த விழாவில்
மலேசியாவை பிரதிநிதித்து மாடல் அழகிகள் கிருஷ்ணவேணி விஜயகுமார், நளினி குப்புசாமி, கேத்தரின் (சினேகா),ஸேனித் மார்க் மற்றும் ஆண் மாடலாக லீவிஸ் குமார் பழனிசாமி ஆகியோர் பங்கு பெற்றனர்.
பல வகையான உடைகள் அணிந்து இவர்கள் தங்களின் மாடல் திறமைகளை வெளிப்படுத்தினர்.

இந்த விழாவில் மஹார்டிக்கா புரொடக்க்ஷன்ஸ் நிறுவனத்தின் இன்டர்நேஷனல் ரைசிங் ஸ்டார் மாடல் FiF 2025 பிரிவில் கிருஷ்ணவேணி விஜயகுமார் பங்கேற்றார்.
மஹார்டிக்கா புரொடக்க்ஷன்ஸ் நிறுவனத்தின் குளோபல் ரன்வே ஸ்டார் மாடல் இன்டர்நேஷனல் FiF 2025 பிரிவில் லீவிஸ் குமார் பழனிசாமி பங்கேற்றார்.
மஹார்டிக்கா புரொடக்க்ஷன்ஸ் நிறுவனத்தின் இன்டர்நேஷனல் ரைசிங் ஸ்டார் 2025 பிரிவில் நளினி குப்புசாமி பங்கேற்றார்.
ஸேனித் மார்க் இன்டர்நேஷனல் ரைசிங் ஸ்டார் மாடல் FiF 2025 பிரிவிலும் கேத்தரின் இன்டர்நேஷனல் ரைசிங் ஸ்டார் மாடல் FiF 2025 பிரிவிலும் பங்கேற்றனர்.
தங்களின் திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்திய அனைவருக்கும் மஹார்டிக்கா புரொடக்க்ஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி லக்கி ஜோ தமது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொண்டார்.
இதனிடையே மாடல் துறையில் தமது பயணம் தொடரும் என கிருஷ்ணவேணி கூறினார்.

இதர நாடுகளில் நடைபெறும் மாடல் நிகழ்ச்சிகளில் பங்கு பெற தாம் ஆர்வம் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இந்த மாடல் துறையில் தாம் ஈடுபட்டு வருவதாக அவர் சொன்னார்.
நமது இந்திய பெண்கள் மாடல் துறையில் ஈடுபட முன்வர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இந்த விழாவிற்கு பல நிறுவனங்கள் ஆதரவு வழங்கின.


