Friday, April 17, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

நமது பிள்ளைகள் சிறு வயது முதல் திருமுறையை கற்றுக் கொள்ள வேண்டும்

நமது பிள்ளைகள் சிறு வயது முதல் திருமுறையை கற்றுக் கொள்ள வேண்டும் என தேசிய ஒருமைப்பாட்டு துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி வலியுறுத்தினார்.
சிறு வயது முதல் திருமுறையை கற்றுக் கொண்டால் இது அவர்களின் பழக்க வழக்கங்களை நெறிமுறைப்படுத்தும் என அவர் குறிப்பிட்டார்.
இந்த விவகாரத்தில் இந்திய பெற்றோர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.


இன்று கூட்டரசு பிரதேச இந்து சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற 46 ஆவது திருமுறை ஓதும் விழாவில் கலந்துகொண்டு அவர் பேசினார்.
நமது பெற்றோர்கள் சிறு வயதிலேயே தங்களின் பிள்ளைகளை திருமுறை ஓதும் வகுப்புகளுக்கு அனுப்ப வேண்டும் என அவர் ஆலோசனை கூறினார்.
இதனிடையே இந்த திருமுறை ஓதும் போட்டி சிறப்பாக நடைபெற இடமளித்த புக்கிட் ஜாலில் தோட்ட தமிழ் பள்ளி நிர்வாகத்திற்கு அவர் நன்றி கூறினார்.
இந்த திருமுறை ஓதும் போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அவர் நன்றி கூறினார்.
இந்த விழா கூட்டரசு பிரதேச இந்து சங்கத்தின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட சாந்தா சுப்பையா தலைமையில் நடைபெற்றது.
இந்த விழாவில் அதிகமான சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular