Thursday, April 16, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

அலை ஓசை தலைமை ஆசிரியர் மற்றும் ராக்ஸ்டார் மீடியா நிறுவனர் சந்திப்பு

கோலாலம்பூர் ஆக 16
அலை ஓசை ஊடகத்தின் தலைமை ஆசிரியர் நவநீத கிருஷ்ணன் ரத்தினம் மற்றும் ராக்ஸ்டார் மீடியா குளோபல் உரிமையாளர் டாக்டர் ராகவி பவனேஸ்வரி அண்மையில் சந்திப்பு நடத்தினர்.
இந்த சந்திப்பில் செய்திகள் பரிமாற்றம் குறித்தும் மக்களுக்கு தரமான செய்திகள் வழங்குவது குறித்தும் விரிவாக பேசினர்.
குறிப்பாக இந்நாட்டில் உள்ள இந்திய சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான செய்திகள் வழங்குவது அவசியம் குறித்தும் இந்த சந்திப்பில் பேசப்பட்டன.
ஜொகூர் பாரு வட்டாரத்தில் சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் ராகவி, தொடர்ந்து சிறப்பான சேவைகளை வழங்க தமது ஆதரவு என்றும் இருக்கும் என நவநீத கிருஷ்ணன் ரத்தினம் இந்த சந்திப்பில் வலியுறுத்தினார்.
ராக்ஸ்டார் புக் ஆப் ரெக்கோட்ஸ், பாரத சக்ரா கல்ச்சரல் யூனிடி அகடமி போன்ற நிறுவனங்களின் வழி அதிகமான சமூகப் பணிகளை ராகவி பவனேஸ்வரி மேற்கொண்டு வருகிறார்.
மேலும் சங்கீத நாட்டிய குருகுலம் ஆர்ட்ஸ் ஸ்டுடியோ அமைப்பின் மூலம் பரதநாட்டிய வகுப்புகளை ஜொகூர் பாரு வட்டாரத்தில் இவர் நடத்தி வருகிறார்.
அலை ஓசை ஊடகம் மற்றும் ராக்ஸ்டார் மீடியா குளோபல் இருந்து வரும் ஒத்துழைப்பு தொடர்ந்து வலுப்பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என இந்த சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular