Saturday, April 18, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

இங்கிலாந்தில் பிறந்த குழந்தையைப் பையில் மறைத்து வைத்த மலேசிய மாணவி கைது 

இங்கிலாந்தில் பிறந்த குழந்தையைத் துணி பையில் மறைத்து வைத்த மலேசியாவைச் சேர்ந்த மாணவி கைது செய்யப்பட்டார்.

22 வயதான தியோ ஜியா சின், லண்டனிலுள்ள Coventry பல்கலைக்கழகத்தில் தனது மேல் படிப்பைத் தொடர இந்த ஆண்டின் தொடக்கத்தில் மலேசியாவிலிருந்து லண்டன் சென்றுள்ளார். 

அவர் மார்ச் 4 -ஆம் தேதி நிறைமாத குழந்தையைப் பெற்றெடுத்த நிலையில் அக்குழந்தையைப் பிளாஸ்டிக் பையில் கட்டித் துணிப்பையில் மறைத்து வைத்துள்ளார். 

தியோ மருத்துவமனைக்குச் சென்ற நிலையில்  மருத்துவர்கள் அவரிடம்  பிரசவ அறிகுறிகளைக் கண்டறிந்துள்ளனர். 

ஆனால் மருத்துவமனை ஊழியர்களிடம் கேட்டபோது அதை அவர் மறுத்துள்ளார். 

பின்னர் குழந்தையைப் பெற்றெடுத்ததை ஒப்புக்கொண்ட தியோ ஜியா சின், இரண்டு நாட்களுக்குப் பிறகு குழந்தையை மறைத்து வைத்த இடத்தை காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

தியோ மருத்துவ உதவியை நாடவில்லை என்றும் வீட்டிலேயே குழந்தையைப் பெற்றெடுத்ததாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மலேசியாவில் உள்ள தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்குத் தெரியக்கூடாது என்பதற்காக அவர் இந்த விஷயத்தை தனது வீட்டார்களிடம் இருந்து ரகசியமாக வைத்திருந்தார்.

பிறந்த பிறகு குழந்தை உயிருடன் இருந்தது,. உயிர்வாழும் சாத்தியம் உள்ளது. ஆனால் குழந்தையின் மரணத்திற்கு வழிவகுக்கும் என்று தெரிந்தும் துணி பையில் குழந்தையை வைக்க தியோ-க்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தியோவுக்கு தண்டனை வழங்குவதற்கான தேதியை Warwick நீதிமன்றம் நிர்ணயிக்கும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular