
இரு நாட்கள் அதிகாரப்பூர்வப் பயணமாக எத்தியோப்பிய பிரதமர் Dr Abiy Ahmed, அவரின் துணைவியார் Zinash Tayachew Bere ஆகியோர் மலேசியா வந்தடைந்துள்ளனர்.
மலேசியாவிற்கு Dr Abiy Ahmed முதல் முறையாகப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
எத்தியோப்பிய பிரதமர் Dr Abiy Ahmed, அவரின் துணைவியார் Zinash Tayachew Bere மற்றும் பேராளர் குழு இன்று காலை 8.30 மணிக்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் வந்தடைந்தார்கள்.
இவர்கள் அனைவரையும் எரிசக்தி நீர் மாற்றம் துணை அமைச்சர் அக்மல் நஸ்ருல்லா முஹம்மத் நசீர் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் நெறிமுறைத் தலைவர் டத்தோ யூபாஸ்லான் யூசோப் ஆகியோர் வரவேற்றார்.
அபியின் மலேசியப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


