
புத்ரா ஜெயா ஆக 15
அண்மையில் புத்ரா ஜெயா, டத்தாரான் புத்ரா ஜெயாவில் நடைபெற்ற 2025 MAPPA ஓட்டத்தில் 12,000 பேர் கலந்து கொண்டனர்.
தேசிய பொது நிர்வாக கழகத்தின் ஒத்துழைப்புடன் அரசு சேவை இலாக்கா இந்த ஓட்டத்தை ஏற்பாடு செய்தது.
இந்த ஓட்டத்தில் செலாயாங் ஒக்கினாவா ஃப்ரி ஸ்டாயில் கராத்தே சங்கத்தின் சீத்தா, ரிஷாலினி மற்றும் யோகிஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த ஓட்டத்தில் இவர்கள் கலந்து கொண்டது சங்கத்திற்கு பெருமை சேர்ப்பதாக சிலாங்கூர் ஒக்கினாவா ஃப்ரி ஸ்டாயில் கராத்தே சங்கத்தின் தலைவர் மாஸ்டர் விஜய் கூறினார்.
இந்த ஓட்டத்தில் கலந்து கொண்ட ஒக்கினாவா ஃப்ரி ஸ்டாயில் கராத்தே குழுவினருக்கு மாஸ்டர் விஜய் மற்றும் மாஸ்டர் சீதாலட்சுமி நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இந்த ஓட்டத்தை அரசாங்க தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ ஷாம்சுல் அஸ்ரி அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.
இந்த போட்டியில் அரசாங்க பணியாளர்கள், பொது இயக்க பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


