Monday, April 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

சொத்துடமையில் முதலீடு செய்ய இந்தியர்கள் முன் வர வேண்டும்!

வாடகை வீடு, வாடகை கடை, வாடகை மண்டபம் என்ற மனப் போக்கிலிருந்து வெளியேறி சொத்துடைமையில் முதலீடு செய்ய நமது இந்திய சமூகம் முன்வர வேண்டும் என சொத்துடமை முகவரான கிரேஸ் ஷீலா ஏசையா கூறுகிறார்.
குறிப்பாக வாடகை வீட்டில் குடியிருப்பதை நமது இந்தியர்கள் வாடிக்கையாக கொள்ள கூடாது என அவர் ஆலோசனை கூறினார்.
ஜொகூர் பாருவில் குறிப்பாக சீனர்கள் மற்றும் மலாய்காரர்களின் சொத்துடைமைகளை தான் நமது இந்தியர்கள் வாடகைக்கு எடுத்து வருகின்றனர்.
இந்தியர்களுக்கு சொத்துடைமை மிக குறைவாக இருப்பதால் இவ்விரு சமூகத்தின் சொத்துடைமைகளை வாடகைக்கு நாம் பயன்படுத்தி வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இதனால் நமது இந்திய சமூகத்தின் பணம் சீனர்கள் மற்றும் மலாய்காரர்களுக்கு கைமாறும் நிலை ஏற்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
இந்த நிலைமை மாற நமது இந்திய சமுதாயத்தில் விழிப்புணர்வு மிக அவசியம் என அவர் தெரிவித்தார்.


வாடகைக்கு மாதந்தோறும் செலுத்தி வரும் பணத்தை சொத்துடமையில் எப்படி முதலீடு செய்வது என்ற விழிப்புணர்வு நமது சமுதாயத்துக்கு மிகவும் அவசியமாகும்.
எவ்வளவு காலத்திற்கு வாடகை வீட்டில் மற்றும் வடகைக் கடைகளில் நாம் காலத்தை செலுத்தப் போகிறோம் என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
வங்கிகளில் கடன்களை பெற்று சொத்துக்களை வாங்கி விட்டால், மாதாந்திரம் வங்கிகளுக்கு மட்டுமே பணத்தை நம் செலுத்த வேண்டி இருக்கும்.
காலப் போக்கில் வாங்கப்பட்ட வீடு அல்லது கடை நம்முடைய சொத்தாக மாறிவிடும் என டைனேமிக் டிரிலோஜி ஹோல்டிங்ஸ் சென்.பெர்ஹாட் நிறுவனத்தின் உரிமையாளரான அவர் தெரிவித்தார்.சொந்த வீடு அல்லது சொந்த கட்டிடத்தை வாங்க வேண்டும் என்பதை நாம் ஒரு கனவாக கண்டு அதை நிஜமாக்க வேண்டும் என அவர் ஆலோசனை கூறினார்.
குறிப்பாக ஜொகூர் பாருவில் தரை வீடுகள் மற்றும் அடுக்குமாடி வீடுகள் உட்பட கட்டிடங்களின் விலை அதிகரித்துக் கொண்டே போகிறது.
சிங்கப்பூர் நமது அண்டை நாடு என்பதால், அதிகமான சிங்கப்பூர் பிரஜைகள் ஜொகூர் பாருவில் சொத்துடைமைகளில் முதலீடு செய்து வருகின்றனர்.
சிங்கப்பூர் நாணயத்தின் மதிப்பு மிக உயர்வாக இருப்பதால், ஜொகூர் பாருவில் சொத்துடமைகளில் முதலீடு செய்ய அவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதனால் நமது இந்தியர்கள் காலப் போக்கில் சொத்துக்களை வாங்குவதில் சிரமங்களை எதிர்நோக்கக்கூடும் என அவர் கோடி காட்டினார்.கோலாலம்பூர் மற்றும் சிங்கப்பூருக்கு இடையே மின்சார ரயில் சேவை (இடிஸ்) தொடங்கப்படவிருப்பதால், தீபகற்ப மலேசியாவில் உள்ள இதர மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் ஜொகூர் பாருவில் சொத்துடமைகளில் முதலீடு செய்ய தங்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தக் கூடும் என அவர் கோடி காட்டினார் ‘என்னால் முடியாது, என்னிடம் பணம் இல்லை, எப்படி சொத்து வாங்குவது?’ என்ற புலம்பலை நாம் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
நமது குறைகள் என்ன என்பதை பிறரிடம் பேசி அதற்கு தீர்வு காண வழிகளை கண்டறிய வேண்டும்.
ஏலத்தில் விடப்படும் வீடுகள் ரொக்க பணத்தில் வாங்க முடியாது என்ற ஒரு கசப்பான அனுபவம் தமக்கு உண்டு என்றார் அவர்.


ஆனால் ஏலத்தில் விடப்படும் வீடு மட்டும் கடை போன்ற சொத்துடைமைகள் ரொக்கத்திலும் வாங்க முடியும் என்பதை தான் நிரூபித்து காட்டியுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
ஆகையால் முடிந்தவரை நம் சமூகத்தினர் இந்திய சொத்துடமை முகவர்களிடம் இது போன்ற ஆலோசனைகளை பெறுவது சிறப்பாக இருக்கும் என தாம் கருதுவதாக அவர் தெரிவித்தார்.
சொத்துடைமைகளில் முதலீடு செய்ய வங்கிக் கடன்களை எப்படி பெறுவது, அதற்கான வழிமுறைகள் குறித்து இவர்களிடம் நல்ல ஆலோசனைகளை பெறலாம் என அவர் சொன்னார்.
சொத்துடைமை முதலீடு தொடர்பான கூடுதல் தகவல்களை பெற வரும்போது கீழ்காணும் தமது தொலைபேசி அல்லது மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம் என அவர் குறிப்பிட்டார்.
Tel:0143397055
Email:grace@dynamictrilogy.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular