
காலஞ்சென்ற துன் வீ.தி சம்பந்தன் மக்களின் ஒற்றுமைக்கும் நாட்டில் ஒருமைப்பாட்டிற்கும் முன்னோடியாக திகழ்ந்தவர் என தேசிய ஒருமைப்பாட்டு துறை அமைச்சர் டத்தோ ஆரோன் ஆகோ டாகாங் புகழாரம் சூட்டினார்.
மலேசியாவின் முதல் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சராக பதவி வகித்த துன் சம்பந்தன், தொழிலாளர்களின் நலன், இந்தியர்களின் வாழ்வாதாரம், கல்வி உட்பட பல துறைகளில் தீவிர அக்கறையை காட்டி வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் ஒருமைப்பாட்டை வலியுறுத்தி பல்வேறு கொள்கைகளை அவர் வரையறைத்தார் என்றார் அவர்.
இன்று பெட்டாலிங் ஜெயா தோட்ட மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசினார்.
நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய ஒரு தேசவாதி துன் சம்பந்தன் என அவர் சொன்னார்.
சமூக நல்லிணமிக்க மளிசியர்களை உருவாக்குவதில் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு பல்வேறு கட்ட நிகழ்ச்சிகளை முன்னெடுத்துள்ளது.
அதில் ஒன்றாக, நாட்டின் ஒற்றுமைக்காக போராடிய துன் சம்பந்தனின் அர்ப்பணிப்புகளை போற்றும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக தேசிய காப்பகத்தின் தயாரிப்பில் Tun Sambanthan Speaks புத்தகம் அறிமுகம் கண்டது.
இந்த புத்தகத்தை அமைச்சர் ஆரோன் ஆகோ டாகாங் அறிமுகம் செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் தேசிய ஒற்றுமை துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி, துன் சம்பந்தனின் புதல்வி தேவ குஞ்சரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


