Monday, April 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

20 தனித்து வாழும் தாய்மார்களுக்கு அத்தியாவசிய பொருள் உதவி!

ஜொகூர் விமாட் சமூக நல இயக்கம் மற்றும் ராக்ஸ்டார் மீடியா குளோபல் நிறுவனம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் 20 தனித்து வாழும் தாய்மார்களுக்கு அத்தியாவசிய பொருள் உதவி வழங்கப்பட்டது.
ஜொகூர் விமாட் சமூக நல இயக்கத்தின் தலைவரும் ராக்ஸ்டார் மீடியா குளோபல் நிறுவனத்தின் நிறுவனருமான டாக்டர் ராகவி பவனேஸ்வரி தலைமையில் ஜொகூர் ஜெயா, தாமான் மொலிக்கில் உள்ள ஸ்ரீ விநாயகர் ஆலயத்தில் இந்த பொருள் உதவிகள் வழங்கப்பட்டது.
அன்றாட வாழ்வாதார பிரச்சனைகளை எதிர்நோக்கி வரும் இந்த தாய்மார்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டதாக டாக்டர் ராகவி பவனேஸ்வரி கூறினார்.
இந்த அத்தியாவாசிய பொருள் உதவி தனித்து வாழும் இந்த தாய்மார்களின் சுமைகளை சற்று குறைக்கும் என தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.
நமது சமூகத்தில் வாழ்வாதார பிரச்சனைகளை எதிர்நோக்கி வரும் தரப்பினருக்கு நம்மால் இயன்ற உதவிகளை வழங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
ஜொகூர் விமாட் சமூக நல இயக்கம் மற்றும் ராக்ஸ்டார் மீடியா குளோபல் நிறுவனம் வறுமைக் கோட்டில் வாழும் தரப்பினருக்கு அவ்வப்போது இது போன்ற உதவிகளை செய்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
தங்களின் இந்த சமூக சேவையை வெற்றியடைய செய்ய மனுதார உதவிகளை வழங்கிய அனைத்து தரப்பினருக்கும் இவ்வேளையில் தாம் நன்றி கூறுவதாக அவர் தெரிவித்தார்.
இந்த திட்டம் வெற்றியடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கிய வினாயா,நீனா மற்றும் செல்வம்பிகை ஆகியோருக்கு தமது பாராட்டை தெரிவித்துக் கொள்வதாக டாக்டர் ராகவி பவனேஸ்வரி குறிப்பிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular