Monday, April 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

இந்தோனேசியாவின் பாலேம்பாங் நகருக்கு பாத்தேக் ஏர் நேரடி விமான சேவை!

இந்தோனேசியாவின் தென் சுமாத்ரா தலைநகரான பாலேம்பாங் நகருக்கு முன்னணி விமான நிறுவனமான பாத்தேக் ஏர் நேரடி விமான சேவையை மேற்கொள்ளவிருக்கிறது.
ஒரு துறைமுக நகரான பலேம்பாங்கிற்கு எதிர் வரும் 12 செப்டம்பர் 2025-ல் தனது முதல் விமான சேவையை பாத்தேக் ஏர் மேற்கொள்ளவிருக்கிறது.
இந்த புதிய விமான சேவையின் மூலம் இந்தோனேசியாவில் பாத்தேக் ஏர் தொடர்ந்து வலிமையாக கால் பதித்து வருவதை உறுதி செய்கிறது.
இந்தோனேசியாவின் வரலாற்றுப் பூர்வ நகரங்களில் ஒன்றான பாலேம்பாங் நகருக்கு எக்கோனோமி மற்றும் பிஸ்னஸ் கிளாஸ் இருக்கைகளைக் கொண்ட B737-800 ரக விமானத்தை பாத்தேக் ஏர் சேவைக்கு அமர்த்துகிறது.
தற்போது இந்தோனேசியாவில் ஜகார்த்தா,பாலி,பாத்தாம்,சுராபாயா,மேடான்,லோம்பொக் மற்றும் பெக்கான் பாரு ஆகிய நகர்களுக்கு பாத்தேக் ஏர் விமான சேவைகளை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே தனது வலிமையான வர்த்தக சந்தையில் இந்தோனேசியா தொடர்ந்து முன்னணி வகித்து வருவதாக பாத்தேக் ஏர் விமான நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ சந்திரன் ராம மூர்த்தி கூறினார்.
பாலேம்பாங் நகருக்கு தனது விமான சேவையின் விஸ்தரிப்பில் பாத்தேக் ஏர் பெருமை கொள்வதாக அவர் சுட்டிக்காட்டினார்.


அதிகமான தீவுகளைக் கொண்ட அந்நாட்டில் பாத்தேக் ஏர் நேரடி விமான சேவைகளை தொடர்ந்து அதிகரித்து வரும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த புதிய விமான சேவையின் மூலம் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலைத்திலிருந்து அனைத்துலக நகர்களுக்கு இந்தோனேசிய பயணிகள் பயணிக்க கூடுதல் வாய்ப்பாக அமைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
யாத்திரை மற்றும் அனைத்துலக பயணிகளுக்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான விளையும் ஒரு முக்கிய விமான மையமாக வளர்ச்சி கண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
இந்த வளர்ச்சிக்கு உதவும் வகையில் பாலேம்பாங் போன்ற கூடுதல் நுழைவாயில்களை பாத்தேக் ஏர் அதிகரித்து வரும் என்றார் அவர்.
பாலேம்பாங் ஸ்ரீ விஜயா பேரரசின் ஆட்சியின் போது மிகவும் பழமை வாய்ந்த நகர்களில் ஒன்றாகும்.
சின்னமாக திகழ்ந்து வரும் முசி ஆற்றங்கரியை ஒட்டிய நகரான பாலேம்பாங்கில் தான் புகழ்பெற்ற அம்பேரா பாலம் அமைந்துள்ளது.
இந்த நகரில் வசீகரமான மிதக்கும் சந்தைகள் சுற்றுப்பயணிகளை அதிகம் கவரும் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்த மிதக்கும் சந்தைகளில் பாரம்பரிய சொங்கோக், கைவினைப் பொருட்கள் மற்றும் பல வகையான உணவுப் பொருட்கள் கிடைக்கும்.
பாலேம்பாங் ஒரு பாரம்பரிய கலாச்சார நகரமாக மட்டுமின்றி துரித வளர்ச்சி கண்டு வரும் தொழில்துறை மற்றும் பொருளாதார மையமாகும்.
ஆகையால் சுற்றுலா மற்றும் வர்த்தக பயணிகளுக்கு பாலேம்பாங் இரட்டை நோக்கங்களை கொண்ட ஒரு நகரமாகும்.


கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் வழி பயணிக்கும் மலேசிய மற்றும் அனைத்துலக பயணிகளுக்கு அதிக அறிமுகமாகாத இந்தோனேசியாவின் மாணிக்கத்தை கண்டுகளிக்க இந்த புதிய விமான சேவை ஒரு அற்புத வாய்ப்பாகும்.
அதே வேளையில் கோலாலம்பூர் மற்றும் அதையும் தாண்டி உள்ள நகர்களுக்கு பயணிக்க பாலேம்பாங் மற்றும் அங்குள்ள சுற்று வட்டார மக்களுக்கு இது ஒரு அற்புத வாய்ப்பாகும்.
யாத்ரிக பயணத்திற்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் பாத்தேக் ஏரின் முக்கிய மையமாக விளங்கி வருவதால், பாலேம்பாங் நகருக்கான இந்த புதிய விமான சேவை மிக பொருத்தமான ஒன்றாகும்.
கடந்த 2024 ஆம் ஆண்டில் சவூதி அரேபியாவிற்கு இந்தோனேசியா உட்பட இதர நாடுகளிலிருந்து 120,000 யாத்ரிக பயணிகளை பாத்தேக் ஏர் கொண்டு சென்றுள்ளது.
தனது ஒவ்வொரு புதிய விமான சேவையின் வழி பாத்தேக் ஏர் சமூகங்கள், கலாச்சாரங்கள் மற்றும் நாடுகளை ஒன்றிணைக்கிறது.
உங்களின் அடுத்த பயணத்தை முடிவு செய்ய www.batikair.com அகப் பக்கத்தை நீங்கள் வலம் வரலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular