
மஇகா ஜொகூர் பாரு தொகுதியின் 31ஆம் ஆண்டு பேராளர்கள் மாநாடு இங்கு வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த மாநாட்டை மஇகா தலைமைகத்தை பிரதிநிதித்து கட்சியின் தேசிய உதவி தலைவர் டத்தோ டாக்டர் நெல்சன் ரங்கநாதன் தொடக்கி வைத்தார்.
மஇகா ஜொகூர் பாரு தொகுதி வெகு சிறப்பாக இயங்கி வருவதாக தமது உரையில் அவர் குறிப்பிட்டார்.
அதே வேளையில் இந்திய சமுதாயத்திற்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்து அவர் வலியுறுத்தினார்.
கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக இந்நாட்டில் உள்ள இந்திய சமுதாயத்தின் நலன்களுக்காக கட்சி பல திட்டங்களை மேற்கொண்டு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்நாட்டிலுள்ள இந்திய சமூகம் மஇகாவிற்கு தொடர்ந்து தங்களின் ஆதரவை வெளிப்படுத்தி வர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இந்த மாநாட்டில் கட்சியின் ஜொகூர் மாநில பிரதிநிதியாக R.K குமரன் கலந்து கொண்டார்.

தேசிய முன்னணி பங்காளி கட்சியான அம்னோவை பிரதிநிதித்து IRDA துணை இயக்குனர் முகமட் இஷாமுடின் கலந்து கொண்டார்.
ஜொகூர் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி குறித்து இஷாமுடின் விரிவாக பேசினார்.
இதனிடையே இந்த பேராளர்கள் மாநாடு சிறப்புடன் நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து தரப்பினருக்கும் மஇகா ஜொகூர் பாரு தொகுதி தலைவர் ஜி. ஜெயசீலன் நன்றி கூறினார்.
சிறப்பாக சேவைகளை செய்து வந்த கிளை தலைவர்களுக்கு இந்த மாநாட்டில் கௌரவிக்கப்பட்டது.
இந்த பேராளர்கள் மாநாட்டை தொகுதியின் செயலாளர் சிவமணி சிறப்பாக வழி நடத்தினார்.
.


