Monday, April 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

தனது IOSA சான்றிதழை பாத்தேக் ஏர் வெற்றிகரமாக புதுப்பித்தது!

தனது அனைத்துலக வான் போக்குவரத்து சங்கத்தின் (IATA) செயல்பாடு பாதுகாப்பு தணிக்கை (IOSA) சான்றிதழை முன்னணி விமான நிறுவனமான பாத்தேக் ஏர் வெற்றிகரமாக புதுப்பித்தது.
பாத்தேக் ஏர் விமான நிறுவனத்தின் உயர்நிலை தர பாதுகாப்பு, நம்பகத்தன்மை மற்றும் நடவடிக்கை ஆளுமையை இது உறுதிப்படுத்துகிறது.
உலகளவில் 300 விமான நிறுவனங்களை IATA பிரதிநிதித்து வருகிறது.
உலகளவில் விமான போக்குவரத்து பாதுகாப்பிற்கு இந்த IOSA சான்றிதழ் அங்கீகாரமிக்க ஒன்றாகும்.


விமான நிறுவன அமைப்புகள் மற்றும் விதிமுறைகளை மதிப்பீடு செய்வதில் IOSA சான்றழிப்பு முக்கிய பங்காற்றுகிறது.
பாத்தேக் ஏர் விமான நிறுவனத்திற்கு புதுப்பிக்கப்பட்ட இந்த சான்றிதழ் 3 ஜூன் 2027 வரை செல்லுபடியாகும்.
அனைத்துலக விமான போக்குவரத்து சங்கத்தின் ஆபத்து அடிப்படையிலான தணிக்கையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விரிவான தணிக்கையை தொடர்ந்து இந்த சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
அனைத்துலக விமான போக்குவரத்து சங்கத்தின் சுயேட்சையான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிபுணர்கள் மேற்கொள்ளும் இந்த தணிக்கை ஈராண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட வேண்டும்.
IOSA தணிக்கையில் மேற்கொள்ளப்படும் எட்டு முக்கிய அம்சங்கள்:

  • அமைப்பு மற்றும் நிர்வாக முறை
  • விமான செயல்பாடுகள்
  • நடவடிக்கை கட்டுப்பாடு மற்றும் அனுப்புதல்
  • விமான பொறியியல் மற்றும் பராமரிப்பு
  • விமானத்திற்குள் செயல்பாடு
  • தரை கையாளுதல்
  • சரக்கு செயல்பாடு
  • விமான போக்குவரத்து பாதுகாப்பு
    இதனிடையே ‘பாத்தேக் ஏர் பொருத்தமட்டில் பாதுகாப்பு ஒரு தரம் மட்டுமின்றி நாங்கள் உங்களுக்கு அளிக்கும் வாக்குறுதி’ என பாத்தேக் ஏர் விமான நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ சந்திரன் ராம மூர்த்தி கூறினார்.
    எங்கள் செயல்பாடுகளின் அஸ்திவாரம் இது. எங்கள் அடையாளத்தின் முக்கிய அம்சம் இது என அவர் சொன்னார்.

  • பாத்தேக் ஏரின் புதுப்பிக்கப்பட்ட IOSA சான்றிதழ்
    “எங்கள் விமான நிறுவனத்தின் நிபுணத்துவம், கட்டொழுங்கு மற்றும் ஆற்றலை’பிரதிபலிக்கிறது என்றார் அவர்.
    அனைத்துலக விமான போக்குவரத்து பாதுகாப்பு தரத்தை நிலை நிறுத்துவதில் பாத்தேக் ஏர் குழுவினரின் தொடர் முயற்சி இது என அவர் சொன்னார்.
    இந்த சான்றளிப்பு எங்கள் பயணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவாதம் மட்டுமின்றி மன அமைதியும் கூட என அவர் சுட்டிக் காட்டினார்.
    உள்நாடு அல்லது அனைத்துலக நகரங்களுக்கு சிறகடிக்கும் பயணிகள் ஒவ்வொரு பாத்தேக் ஏர் விமானமும் பாதுகாப்பு நடைமுறை, தடையற்ற தொடர்புகள் மற்றும் செயல்பாடு தரங்களை கொண்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்ளலாம் என அவர் குறிப்பிட்டார்.

  • பாதுகாப்பு, நம்பகத்தன்மை மற்றும் சொகுசான விமான பயணம் ஆகியவற்றை நிலை நிறுத்தி பாத்தேக் ஏர் தொடர்ந்து தனது பிராந்திய மற்றும் அனைத்துலக நகரங்களில் கால் பதித்து வரும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
    பாத்தேக் ஏரின் புதுப்பிக்கப்பட்ட IOSA சான்றிதழ் இந்த விமான நிறுவனத்தின் தூரநோக்கு மற்றும் ஆழமாக கால் பதித்துள்ள அம்சங்களை பிரதிபலிப்பாக அவர் சொன்னார்.
    பாத்தேக் ஏரில் சிறகடிக்கும் பயணிகள் ஒரு புதிய விமானம், விமான தொழில் துறையில் சிறந்த நடைமுறை மற்றும் அற்புதமான கலாச்சார பாதுகாப்பு போன்ற பயன அனுபவத்தை பெறலாம் என டத்தோ சந்திரன் ராம மூர்த்தி கூறினார்.
    கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் மற்றும் சுபாங் சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா விமான நிலையம் ஆகியவற்றில் முக்கிய மையமாக செயல்பட்டு வரும் பாத்தேக் ஏர் துரித வளர்ச்சியை கண்டு வருகிறது.

  • 20 நாடுகளில் 60க்கும் மேற்பட்ட நகர்களுக்கு பாத்திக் ஏர் சிறகடித்து வருகிறது.
    வாரத்திற்கு 1,400 விமான சேவைகளை மேற்கொண்டு வரும் இந்த விமான நிறுவனம் 2023-ல் 45 லட்சம் பயணிகள் மற்றும் 2024-ல் 66 லட்சம் பயணிகளை கொண்டு சென்றுள்ளது.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular