
இங்குள்ள ஜாபோர் தோட்ட ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த ஆலய திருவிழாவிற்கு பாஸ் ஆதரவு பேரவையின் திரெங்கானு மாநில தலைவரும் மாநில மந்திரி பெசாரின் சிறப்பு அதிகாரியுமான டாக்டர் பாலச்சந்திரன் கோபாலகிருஷ்ணன் சிறப்பு வருகை புரிந்தார் .
இந்த ஆலய திருவிழா கெமமான் மாவட்ட பாஸ் ஆதரவு பேரவையின் தலைவரும் இந்த ஆலயத்தின் தலைவருமான சிவா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
சிறப்பாக நடைபெற்ற இந்த திருவிழா கொண்டாட்டத்தில் சமூகத்தின் ஒற்றுமை மற்றும் நமது இந்திய கலாச்சாரத்தில் மாண்பை பிரதிபலிப்பாக சிவா கூறினார்.
இந்த ஆலய திருவிழாவிற்கு இங்குள்ள சுற்று வட்டார இந்திய சமூகத்தினர் திரளாக கலந்து கொண்டதாக அவர் சொன்னார்.

மேலும் இங்குள்ள யுனிஸா பல்கலைக்கழக மாணவர்கள் இங்கு வருகை புரிந்த பக்தர்களுக்கு இலவச சுகாதார பரிசோதனையை செய்து மக்களின் மனதை கவர்ந்ததாக அவர் தெரிவித்தார்.
இதனிடையே இந்த ஆலய திருவிழா சிறப்பாக நடைபெற்றது நமக்கு பெருமையை சேர்ப்பதாக டாக்டர் பாலச்சந்திரன் தமது உரையில் கூறினார்.
இந்திய சமூகத்தினர் நமது கலை மற்றும் கலாச்சாரத்தை தொடர்ந்து காக்க வேண்டும் என அவர் சொன்னார்.
பாஸ் தலைமையிலான திரெங்கானு மாநில அரசாங்கம் இன பாகுபாடு இன்றி மாநில மக்களுக்கு சேவைகளை வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த ஆலய கொண்டாட்டத்தில் தீமிதி உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
ஆலயத்திற்கு வருகை புரிந்த பக்தர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது.
இந்த விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சிவா நன்றி கூறினார்.


