Monday, April 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

எல்ஜிஎம் தோட்ட ஸ்ரீ ஸ்ரீ மஹா கருமாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது!

இங்குள்ள மஹா ஸ்ரீ கருமாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேக வைபவத்திற்கு ஜொகூர் மாநில மஇகா தலைவரும் மாநில அரசாங்க ஆட்சி குழு உறுப்பினருமான ரவீன் குமார் சிறப்பு வருகை புரிந்தார்.
இந்த கும்பாபிஷேகம் சமய நிகழ்வு மட்டுமின்றி பல இன மக்களிடையே ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வை ஏற்படுத்தும் ஒரு கொண்டாட்டம் என தமதுரையில் ரவீன் குமார் கூறினார்.


இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்து ஆலய நிர்வாகம் மற்றும் வட்டாரத்தில் உள்ள இந்திய சமூகத்திற்கு தாம் நன்றி கூறுவதாக அவர் குறிப்பிட்டார்.
ஜொகூர் மாநிலத்தில் உள்ள பல்லின மக்களிடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் வலுப்பெற வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே இந்த கும்பாபிஷேகம் வெற்றியடைய செய்ய முழுமையான ஒத்துழைப்பை வழங்கிய அனைத்து தரப்பினருக்கும் தாம் நன்றி கூறுவதாக இந்த ஆலயத்தின் தலைவர் சுப்ரா கூறினார்.
இந்த கொண்டாட்டத்திற்கு சிறப்பு பிரமுகராக கலந்து கொண்ட ரவீன் குமார் மற்றும் இதர பிரமுகர்களுக்கு தாம் நன்றி கூறுவதாக அவர் சொன்னார்.


இந்த கும்பாபிஷேக கொண்டாட்டத்தில் ஜொகூர் மஇகா துணைத் தலைவர் நிலராஜா,YSR தலைவர் டத்தோ சுகுமாரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular