
கிழக்கு மலேசியாவின் கோத்தா பாரு மற்றும் தென் கொரியா தலைநகரான சியோல் நகருக்கிடையே முன்னணி விமான நிறுவனமான பாத்திக் ஏர் நேரடி விமான சேவையை தொடங்கவிருக்கிறது.
இந்த புதிய விமான சேவை எதிர்வரும் 12 செப்டம்பர் 2025 முதல் தொடர்ந்து இருக்கிறது. வாரத்திற்கு மூன்று முறை இந்த விமான சேவையை பாத்திக் மேற்கொள்ளவிருக்கிறது.
சபாவின் இயற்கை அழகு மற்றும் கலாச்சார வளங்களை தென் கொரிய மக்கள் கண்டு மகிழ இது ஒரு பொன்னான வாய்ப்பாகும்.
கிழக்கு மலேசியா பயணிகள் தென் கொரியாவிற்கு எளிதில் சென்றடைய இந்த புதிய விமான சேவை உதவுகிறது.
தென் கொரியா பயணிகள் தென்கிழக்கு ஆசியாவிற்கு தடையின்றி பயணிக்க இந்த புதிய விமான சேவை துணை புரியும்.

கடந்த 2024 ஜனவரி முதல் செப்டம்பர் வரை தென் கொரியாவிலிருந்து 152,000 பயணிகள் சபாவிற்கு வருகை புரிந்துள்ளனர்.
சபாவிற்கு தென் கொரிய பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு கண்டு வருவதை இது காட்டுகிறது.
சபாவின் அழகிய மலைக்காடுகள், உலகின் புகழ்பெற்ற முக்குளிப்பு இடங்கள், முக்கிய சின்னமான கின பாலு மலை, வளமான பண்பாட்டு அம்சங்கள் தென் கொரிய பயணிகளை அதிகம் கவரும் என்பதில் சந்தேகமில்லை.
கோத்தா கினபாலு அனைத்துலக சுற்றுப்பயணிகளை அதிகமாக கவர்ந்து வருகிறது என்று தான் கூற வேண்டும்.
இதனிடையே இப்பிராந்திய உறவுகளை மேலும் வலுப்படுத்த தங்கள் விமான நிறுவனத்தின் இலக்கை அடையச் செய்ய இந்த புதிய சேவை மிகவும் என பாத்திக் ஏர் விமான நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ சந்திரன் ராம மூர்த்தி கூறினார்.
கிழக்கு மலேசியாவின் தொடர்புகளை அதிகரிக்க இந்த புதிய சேவை துணை புரியும் என அவர் சொன்னார்.
இந்த புதிய விமான சேவை சபா மற்றும் தென் கொரிய பயணத் தொடர்புகளை வலுப்படுத்துவது மட்டுமின்றி, ஆசியாவில் பாத்திக் ஏர் தொடர்ந்து வலிமையாக கால் பதித்து வருவதை காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
கலாச்சாரம், பொருளாதாரம் மற்றும் சமூகங்களுக்கு இடையே அர்த்தமுள்ள தொடர்புகளை தாங்கள் உருவாக்கி வருவதாக அவர் தெரிவித்தார்.
மலேசியர்களுக்கு தென் கொரியா தொடர்ந்து முன்னணி அனைத்து உலகை நகரங்களில் ஒன்றாக விளங்கி வருவதாக அவர் கோடிக் காட்டினார்.
இந்த பட்டியலில் தென் கொரிய ஐந்தாம் நிலையில் உள்ளது என்றார் அவர்.
கடந்த 2024-ல் தென் கொரியாவிற்கு 300,386 மலேசியர்கள் வருகை புரிந்துள்ளதாக கொரியா சுற்றுலா துறையின் புள்ளி விவரம் கூறுகிறது.
தென் கொரியாவின் கலாச்சாரம் மற்றும் உணவு வகைகள் மலேசியர்களை அதிகம் கவர்ந்துள்ளது என்பதை இது காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த புதிய விமான சேவையின் மூலம் தென் கொரியா மற்றும் கிழக்கு மலேசியாவுக்கு இடையிலான சுற்றுலாத்துறை வலிமை பெறும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த புதிய விமான சேவை சுற்றுப்பயணிகளை அறியும் கவரும் என அவர் சொன்னார்.
உங்களின் அடுத்த பயணத்தை திட்டமிட பாத்திக் ஏர் செயலி அல்லது www.batikair.com இணையத்தில் வலம் வரலாம்.


