
செப்பாங் மே 14
மலேசியா மற்றும் பேர்த் நகருக்கிடையே
போக்குவரத்தை மேலும் வலுப்படுத்த ஏர் ஆசியா மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா சுற்றுலாத்துறை கூட்டு ஒத்துழைப்பு அறிவித்துள்ளது.
இந்த கூட்டு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக கோலாலம்பூரிலிருந்து பேர்த் நகருக்கான விமானங்களுக்கு வெ 400,000 மதிப்பிலான தள்ளுபடி குறியீடுகளை ஏர் ஆசியா வழங்குகிறது.
இந்த உற்சாக முயற்சி ஏர் ஆசியாவின் பரந்த அர்ப்பணிப்பில் ஒரு பகுதியாகும்.
பயணிகளுக்கான இந்த வெகுமதியானது மேற்கு ஆஸ்திரேலியாவிற்கு பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும்.
இந்த வெ 200 தள்ளுபடி பெற ஏர் ஆசியா பயணிகள் AAPERTWA விளம்பர குறியீட்டை பதிவு செய்ய வேண்டும்.
இந்த தள்ளுபடியை பெற பயணிகள் 14 மே முதல் 31 ஜூலை 2025க்குள் டிக்கெட்டுகளை கொள்முதல் செய்து கொள்ள வேண்டும். இதற்கான பயண காலம் 31 டிசம்பர் 2025 வரை தான்.
பேர்த் நகர் அனைவரும் பார்க்க வேண்டிய நகர் என்பதால் ஏர் ஆசியா பயணிகளை ஊக்குவிக்கிறது.
ஆஸ்திரேலியாவின் மேற்கு நுழைவாயில் பேர்த் நகர் என்பதால் அங்கு கண்டுகளிக்க அதிக அற்புதங்கள் உள்ளன.
இதனிடையே ஆஸ்திரேலியாவில் பேர்த் ஒரு புகழ்பெற்ற நகராகும் என ஏர் ஆசியா மலேசியாவின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ கேப்டன் ஃபாரே மாஸ்புத்ரா கூறினார்.
பேர்த் நகருக்கான விமான சேவையை ஆஸ்திரேலியா தொடங்கியது முதல் லட்சக்கணக்கான பயணிகளை ஏர் ஆசியா கொண்டு சென்றுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.

அதிகமான மலேசியர்கள் பேர்த் நகருக்கு படையெடுப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் மேற்கு ஆஸ்திரேலியாவுடன் கூட்டு ஒப்பந்தத்தில் ஈடுபடுவதில் ஏர் ஆசியா மிகவும் ஆர்வம் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த கூட்டு ஒப்பந்தத்தால் அதிகமான மலேசியர்கள் மேற்கு ஆஸ்திரேலியாவிற்கு வருகை புரிவார்கள் என மேற்கு ஆஸ்திரேலியா சுற்றுலா துறையின் நிர்வாக இயக்குனர் அன்னேக்கா ப்ராவ்ன் கூறினார்.
பேர்த் நகரின் இயற்கை மற்றும் பாரம்பரியம் மலேசியர்களை அதிக கவர செய்யும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அதேவேளையில் பேர்த் நகர் மக்கள் மலேசியாவிற்கு செல்ல இது ஒரு அற்புதமான வாய்ப்பு என அவர் சுட்டிக் காட்டினார்.


