Monday, April 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

தலைநகரில் வருடாந்திர குறுக்கோட்டப் போட்டியில் சுமார் 1,500 பேர் கலந்து கொள்வார்கள்

கூட்டரசு பிரதேசம் கோலாலம்பூர் விளையாட்டு சங்கத்தின் வருடாந்திர குறுக்கோட்டப் போட்டியில் சுமார் 1,500 போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த போட்டி 11 பிரிவுகளாக நடைபெறும் என கூட்டரசு பிரதேச கோலாலம்பூர் விளையாட்டு சங்கத்தின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் வீ. புலேந்திரன் கூறினார்.
இந்த புதுக்கோட்டப் போட்டி எதிர்வரும் 6 ஆம் தேதி ஜூலை 2025 தலைநகர் மெர்போக் திடலில் காலை 6.45 மணிக்கு தொடங்கும் என கடந்த சில தினங்களுக்கு முன்பு இங்கு நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் இந்த போட்டியில் பங்கெடுக்கும் போட்டியாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
கடந்த ஆண்டு இந்த போட்டியில் பள்ளி பிரிவுகளில் பங்கெடுக்கும் போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு கண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டில் இந்த போட்டியில் 81 வெளிநாட்டு போட்டியாளர்கள் கலந்து கொண்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஆகையால் இவ்வாண்டில் இந்த போட்டியில் போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தப் போட்டியில் ஆண் மற்றும் பெண்களுக்கான 15 கிலோமீட்டர், முதியோர் ஆண் மற்றும் பெண்களுக்கான 15 கிலோமீட்டர், இடைநிலைப்பள்ளி ஆண் மற்றும் பெண்களுக்கான 7 கிலோமீட்டர், ஆரம்பப் பள்ளி ஆண் மற்றும் பெண்களுக்கான 3 கிலோமீட்டர் ஓட்டம் நடைபெறும்.


இந்த போட்டியில் பங்கு பெறவிருக்கும் போட்டியாளர்கள் ஆன்லைன் மூலம் தங்களின் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த போட்டியில் பங்கு பெறும் போட்டியாளர்களுக்கு டி சட்டை, காலை சிற்றுண்டி, அன்பளிப்பு பை, போட்டியை முடிக்கும் பதக்கம், காப்புறுதி, நிலைப் பதக்கம்,1-5 நிலைக்கு வருபவர்களுக்கு ரொக்கம் போன்ற சலுகைகள் வழங்கப்படும்.
இதனிடையே இந்த போட்டிக்கு முதன்மை ஆதரவை வழங்கும் எஸ்டிஎம் லாட்டரி நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கியாம் சாய் கூனுக்கு தாம் நன்றி கூறுவதாக டத்தோஸ்ரீ புலேந்திரன் கூறினார்.
இந்த போட்டி வெற்றிகரமாக நடைபெற எஸ்டிஎம் லாட்டரி வெ 1 லட்சம் நன்கொடை வழங்கியதாக அவர் சுட்டி காட்டினார்.
இந்த போட்டியை வெற்றியடையச் செய்ய நன்கொடை வழங்கிய இதர நிறுவனங்களான பெர்ஜாயா,அன்ஸா,கென்னி ரோஜர்ஸ்,ஸ்டார்பர்க்,கோஸ்வே,போஸ்பிட்,தி சன்,மைலோ மற்றும் 100 பிளாஸ் ஆகிய நிறுவனங்களுக்கு அவர் நன்றி கூறினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular