
எதிர்வரும் கட்சித் தேர்தலில் துணைத் தலைவர் பதவி தேர்தலில் தோல்வியுற்றால் அமைச்சர் பதவியிலிருந்து தாம் விலகிக் கொள்ளப் போவதாக பிகேஆர் துணைத் தலைவரும் பொருளாதார அமைச்சருமான ராபிசி ராம்லி கூறினார்.
அமைச்சர் பதவியில் தொடர்ந்து தாம் நீடிக்காவிட்டால், பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசுவதற்கு தமக்கு போதுமான அவகாசம் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற நிலையில் எதிர்வரும் 16 ஆம் பொதுத் தேர்தலை சந்திக்க பிகேஆர் கட்சியை வலுப்படுத்த தம்மால் கவனம் செலுத்த முடியும் என அவர் சுட்டிக் காட்டினார்.
“இந்த கட்சித் தேர்தலில் நான் தோல்வி அடைந்தால், அமைச்சர் பதவியிலிருந்து விலகி, ஒரு சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராக நான் செயல்படுவேன்’ என்றார் அவர்.


