Thursday, April 16, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

கம்போங் காசிப்பிள்ளை ஸ்ரீ மஹா காளியம்மன் ஆலய பால் அபிஷேகத்தில் சரஸ்வதி கலந்து கொண்டார்

நேற்று காலை இங்கு கம்போங் காசிப்பிள்ளை ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலய வருடாந்திர பால் அபிஷேக விழாவில் தேசிய ஒற்றுமை துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கலந்து சிறப்பித்தார்.
இந்த வருடாந்திர பால் அபிஷேக திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
பக்தர்கள் பால் குடங்களை ஏந்தி அம்மனுக்கு தங்களின் காணிக்கையை செலுத்தினர்.
இது போன்ற ஆன்மீக நிகழ்வுகள் நமது மதம் மற்றும் கலாச்சாரத்தை மேலும் வலுப்படுத்துவதாக சரஸ்வதி கூறினார்.


குறிப்பாக இளம் சந்ததியினர் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாட்டை காட்ட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
ஆன்மீகத்தில் அதிக கவனம் செலுத்தினால் நமது இளைய தலைமுறையினர் சிறப்பான எதிர்காலத்தை அடைய முடியும் என அவர் குறிப்பிட்டார்.
இந்த விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு தங்களின் காணிக்கை செலுத்தினர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular