
மலேசியாவிற்கு அதிகாரப்பூர்வ வருகையை மேற்கொண்டிருக்கும் சீன அதிபர் ஸீ ஜின்பிங்கிற்கு மாட்சிமை தங்கிய பேரரசர் மற்றும் பேரரசியார் வழங்கிய தேசிய விருந்துபசரிப்பில் தேசிய ஒருமைப்பாட்டு துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கலந்து கொண்டார்.
நேற்று கோலாலம்பூர் இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற இந்த விருந்து நிகழ்ச்சியில் இரு நாடுகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் அரசாங்க உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
12 ஆண்டுகளில் அதிபர் ஸீ ஜின்பிங் மேற்கொள்ளும் இரண்டாவது அதிகாரப்பூர்வ வருகை இதுவாகும்.

ஆக கடைசியாக கடந்த 2013 ஆம் ஆண்டில் அதிபர் ஸீ ஜின்பிங் மலேசியாவிற்கு வருகை புரிந்துள்ளார்.
சீன அதிபரின் இந்த வருகையால் இரு நாடுகளில் தூதரக மற்றும் வர்த்தக உறவுகள் வலுப்பெற வழி வகுத்துள்ளது.


