
நமது பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் கட்டிக் காக்கும் கடட்பாடு நமக்கு உண்டு என தேசிய ஒருமைப்பாட்டு துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறினார்.
இந்த புத்தாண்டில் உங்கள் வாழ்வில் புதிய தெளிவுகள், மகிழ்ச்சி, சந்தோஷம் மற்றும் முழுமையான ஆரோக்கியம் பெறுக என மனதார இறைவனை பிரார்த்திக்கிறேன்.
மகிழ்ச்சியுடன் புத்தாண்டு வரவேற்கும் அதே வேளையில் இந்த நாட்டின் சுபிட்சம் தையும் மக்களிடையே ஒருமைப்பாட்டையும் மேம்படுத்தும் மகத்தான பொறுப்பையும் நாம் முழுமையாக உணர்ந்து செயல்பட வேண்டியது அவசியம்.
இந்த இனிய வேளையில் வைசாக்கி மற்றும் விசு புத்தாண்டை கொண்டாடும் அன்பர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
உங்கள் குடும்பம் மற்றும் உறவுகளுடன் இந்த புத்தாண்டை களிப்புடன் கொண்டாட தாம் வாழ்த்துவதாக அவர் குறிப்பிட்டார்.


