
இங்குள்ள குர்ட்வாரா சாஹிப் சீக்கிய கோயிலில் வைசாக்கி தின கொண்டாட்டத்தில் தேசிய ஒருமைப்பாட்டு துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கலந்து கொண்டார்.
இந்த கொண்டாட்டத்தில் கலாச்சார நடனங்கள் இசைகள் படைக்கப்பட்டது.
சீக்கியர்களின் தற்காப்பு கலையான ‘காட்கா’ கலையும் படைக்கப்பட்டது.

பல இன மக்கள் வாழும் இந்நாட்டில் இது போன்ற கொண்டாட்டங்கள் ஒருமைப்பாட்டை வலுப்பெறச் செய்கிறது என செனட்டர் சரஸ்வதி கூறினார்.
இந்த கொண்டாட்டத்தில் வைசாகி பற்றி ஆழமாக தாம் தெரிந்து கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.


