
மலேசியாவை தளமாக கொண்ட பாத்திக் ஏர் கோலாலம்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு இடையே நேரடி விமான சேவையை மேற்கொள்ளவிருக்கிறது.
இவ்விரு முக்கிய நகர்களுக்கு இடையே வாரத்திற்கு 4 விமான சேவைகளை பாத்திக் ஏர் மேற்கொள்ள திட்டம் கொண்டுள்ளது.
இந்த புதிய விமான சேவைக்கு பறந்த உருவமைப்பை கொண்ட A330-300 விமானம் பயன்படுத்தப்படும்.
இந்த விமானத்தில் 377 இருக்கைகளில் 12 பிஸ்னஸ் கிளாஸ் மற்றும் 365 எக்கோனி கிளாஸ் கொண்டிருக்கும்.
லைன் ஏர் குழும நிறுவனத்தின் துணை நிறுவனமான பாத்திக் ஏரின் இந்த புதிய சேவை, மெல்பர்ன் மற்றும் பாலிக்கு இடையே தினசரி விமான சேவையின் ஒரு கூடுதல் சேவையாக கருதப்படுகிறது.
இதனிடையே அனைத்துலக பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கூடுதல் முனியங்களை அமைக்க மெல்பர்ன் விமான நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.
நடப்பு தேவை மற்றும் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு இந்த விமான நிலையத்தில் கூடுதல் அடிப்படை வசதிகளை மேம்படுத்த திட்டம் கொண்டிருப்பதாக இந்த விமான நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி லொரி அர்குஸ் கூறினார்.

கடந்த பிப்ரவரி 2025-ல் 2,729,545 பயணிகள் இந்த விமான நிலையத்தை வந்தடைந்ததாக அவர் குறிப்பிட்டார்.
இவர்களில் 930,356 அனைத்துலக பயணிகள் என்றார் அவர்.
மெல்போர்ன் தலைநகரான விக்டோரியா மக்களுக்கு இந்த புதிய விமான சேவையின் மூலம் கூடுதல் அனைத்துலக பயண வாய்ப்புகளை வழங்குவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
அதே வேளையில் மெல்பர்ன் நகருக்கு அனைத்துலக பயணிகள் மற்றும் மாணவர்கள் வருகை புரிய இது ஒரு பொன்னான வாய்ப்பு என அவர் சுட்டிக் காட்டினார்.
மெல்போர்ன் மற்றும் கோலாலம்பூருக்கு இடையே 3 விமான நிறுவனங்கள் தற்போது நேரடி விமான சேவையை மேற்கொண்டு வருகிறது.
ஒரு பிரீமியம் விமான நிறுவனமான பாத்திக் ஏர் தற்பொழுது இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் 70க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு சிறகடித்து வருகிறது.
இதனிடையே கோலாலம்பூர்-மெல்பர்ன் விமான சேவை பாத்திக் ஏரின் மற்றொரு மைல்கள் என பாத்திக் ஏர் விமான நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ சந்திரன் ராம மூர்த்தி கூறினார்.
ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் தனது விமான சேவையை பாத்திக் ஏர் தொடர்ந்து விரிவாக்கம் செய்து வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
தனது பயணிகளுக்கு விரிவான மற்றும் தரமான சேவையை பாத்திக் ஏர் தொடர்ந்து வழங்கி வரும் என அவர் நம்பிக்கை அளித்தார்.


