
நாட்டில் உள்ள இந்து ஆலயங்கள் எதிர்நோக்கி இருக்கும் நிலப் பிரச்சினை, ஆர்.ஓ.எஸ். பிரச்சினை மற்றும் நிர்வாக பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் மலேசி இந்து சங்கம் இன்று முக்கிய சந்திப்பு கூட்டத்தை நடத்தியது இந்து ஆலயங்கள் எதிர் நோக்கி உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஆலயங்கள் ஒருங்கிணைப்பு குழுவை அமைப்பது தொடர்பில் பிரதமர் துறை அமைச்சிடம் மகஜரை சமர்ப்பித்தது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கனிடம் மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் தங்க கணேசன் மகஜரை வழங்கினார்.
இன்று கோலாலம்பூர் கலா மண்டபத்தில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் 500 கோவில்களை பிரதிநிதித்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்து கொண்டனர்.
பெரும்பாலான இந்து ஆலயங்கள் நிலப் பிரச்சினை எதிர் நோக்கி இருக்கிறது.
அடுத்ததாக ஆலய நிர்வாக பிரச்சினையாகும் என்று தங்க கணேசன் தெரிவித்தார்.
இன்று கூட்டத்தில் கலந்து கொண்ட ஏராளமான கோவில் பொறுப்பாளர்கள் நிலப் பிரச்சினை குறித்து தங்களது மனக்குமுறல்களை கொட்டித் தீர்த்தனர். தற்போது நாட்டில் நூறுக்கும் மேற்பட்ட ஆலயங்கள் அரசாங்கத்தின் திவால் இலாகா கீழ் உள்ளது.

மேலும் பல முக்கிய ஆலயங்கள் சட்டப் பிரச்சனையை எதிர்நோக்கி நீதிமன்றத்தில் உள்ளது என்று அவர் சொன்னார்.
இதற்கு எல்லாம் தீர்வு காண ஆலயங்கள் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப் பட வேண்டும்.
இதன் மூலம் ஆக்கப்பூர்வமான முறையில் இந்து ஆலயங்கள் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தற்போது நாட்டில் 2,500 க்கும் மேற்பட்ட ஆலயங்கள் உள்ளன. இதில் அரசாங்கம் பதிவு பெற்ற ஆலயங்கள் ஆயிரம் இருக்கும்.
நிலப்பிரச்சனை காரணமாக 1,500 ஆலயங்கள் பதிவு பெற முடியாமல் உள்ளது. இருப்பினும் இந்த ஆலயங்கள் மலேசிய இந்து சங்கத்தில் பதிவு செய்துள்ளன என்று அவர் சொன்னார். மேலும் ஒற்றுமைத் துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி கூறும் போது பிரதமர் ஆதரவில் இந்த கோயில் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு ஏற்படும் வகையில் இந்து சங்கத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது எந்த பிரச்சனையானாலும் இந்து சங்கத்தின் மூலம் விடிவு காலம் விடிவு காலம் பிறக்கும் என்றார். இந்நிகழ்வில் சிறப்பு வருகை புரிந்த செந்தமிழ் செல்வர் ஓம் தியாகராஜன் பேசும் போது அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து கோவில்களை பராமரிக்க வேண்டும் அதிகமான இளைஞர்கள் இதில் ஈடுபட்டு நம் கலாச்சாரத்தை வளர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் பல பிரச்சினைகள் உள்ளன அரசாங்கம் இன்றைய பிரதமர் நமக்கு போதுமான உதவிகளை செய்து கொண்டுதான் இருக்கிறார் அதனால் இந்த கோயில் பிரச்சனைக்கு அனைவரும் இன்று ஒன்று சேர்ந்து வந்திருப்பது போல எல்லா விஷயங்களிலும் நாம் ஒன்று அணிய வேண்டும் என்று ஒன்று இணைய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்


