Tuesday, April 21, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

குக்குப் ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா சிறப்பாக நடைபெற்றது

பொந்தியானில் உள்ள குக்குப் ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
நேற்று காலை முதல் பக்தர்கள் பால்குடம் ஏந்தி மற்றும் தீமிதித்து அம்மனுக்கு தங்களின் காணிக்கையை செலுத்தினர்.
தீமிதியை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
இந்த தீமிதி திருவிழாவில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தீமிதி திருவிழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


இந்த தீமிதி திருவிழா வெற்றிகரமாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து தரப்பினருக்கும் ஆலய தலைவர் ஜெயா நன்றி தெரிவித்துக் கொண்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular