
மலாக்கா மார்ச் 4
மலாக்கா மாநில அளவிலான 2025 ஒருமைப்பாட்டு வார கொண்டாட்டத்தில் தேசிய ஒருமைப்பாட்டு துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கலந்து கொண்டார்.
நேற்று இரவு ஆயர் கெரோவில் உள்ள மலக்கா அணைத்து உலக வர்த்தக மையத்தில் நடந்த இந்த கொண்டாட்டத்தில் தேசிய ஒருமைப்பாட்டு துறை அமைச்சர் டத்தோ ஆரோன் ஆகோ டாகாங் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
பன்முகத்தன்மையில் நல்லிணக்கம் என்ற கருப்பொருளுடன் இந்த கொண்டாட்டம் நடைபெற்றது.

மலேசியாவில் பன்முகத்தன்மை கொண்ட கலை மற்றும் கலாச்சாரத்தை புரிந்து கொள்ளும் அவசியம் குறித்து இந்த கொண்டாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இந்த ஒருமைப்பாட்டு கொண்டாட்ட வாரம் மலேசியா மடானி இலக்கை அடைய உறுதுணையாக இருக்கும்.


