
ஜொகூர் பாரு ஏப் 2
ஹாரி ராயா கொண்டாட்டத்தையொட்டி ஜொகூர் மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹபிஸ் காஸி தமது அதிகாரப்பூர்வ இல்லத்தில் மக்களுக்கு பொது உபசரிப்பை நடத்தினார்.
தமது அதிகாரப்பூர்வமான இல்லமான சௌஜானாவில் நடைபெற்ற இந்த பொது உபசரிப்பில் அரசியல் தலைவர்கள், அரசு சார்பற்ற அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
பங்சா ஜொகூர் உணர்வுடன் நடத்தப்பட்ட இந்த பொது உபசரிப்பில் கலந்து கொண்டவர்களுக்கு சுவையான உணவு வகைகள் பரிமாறப்பட்டன.

ஜொகூர் மஇகா தலைவரும் மாநில ஆட்சி குழு உறுப்பினர் ரவீன் குமார், மாநில மஇகா துணைத் தலைவர் நிலா ராஜா உட்பட பல இந்திய தலைவர்கள் இந்த உபசரிப்பில் கலந்து கொண்டனர்.


