
மலேசியர்கள் ஹாரி ராயா கொண்டாட்டத்திற்கு தயாராகும் வேளையில் பாத்திக் ஏர் OD 7908 விமானம் குதூகலமாக சபாவின் தாவாவ் நகருக்கு புறப்பட்டது.
நேற்று இரவு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் உற்சாகமாக காணப்பட்ட பயணிகளை போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் மகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைத்தார்.
இந்த பயணிகளுக்கு ஹாரி ராயா வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதோடு அன்பளிப்பு பைகளையும் அவர் வழங்கினார்.
இந்த சிறப்பு வழியனுப்பி நிகழ்வு ஹாரி ராயா கொண்டாட்ட உணர்வுடன் குதூகலமாக காணப்பட்டது.
OD 7908 விமானம் 160 பயணிகளுடன் இரவு 9 மணிக்கு தாவாவ் நகருக்கு புறப்பட்டது.
இந்த பயணம் பலருக்கு வீடு திரும்பும் பயணமாக இருந்தது என்பதில் சந்தேகமில்லை.

இதனிடையே ஹாரி ராயா போன்ற விழா காலங்களில் பாத்திக் ஏர் தடையற்ற விமான சேவைகளை வழங்கி வருவதாக பாத்திக் ஏர்விமான நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ சந்திரன் ராம மூர்த்தி கூறினார்.
இந்த ராயா விழா காலத்தில் அடிக்கடி விமான பயணங்களை பாத்திக் ஏர் உறுதி செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
விழா கொண்டாட்டத்திற்கு ஏதுவாக குறிப்பாக உள்நாட்டு விமான சேவைகளை பாத்திக் ஏர் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
கோலாலம்பூர்-தாவாவ் விமான சேவையை பாத்திக் ஏர இரட்டிப்பாகி உள்ளது. இப்பொழுது முதல் ஹாரி ராயா வரை கோலாலம்பூர்-தாவாவ் நகருக்கிடையே 2,700 பயணிகள் கொண்டு செல்லப்படுவர் என்றார் அவர். இதே காலகட்டத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டில் 1,100 பயணிகள் மட்டுமே கொண்டு செல்லப்பட்டதாக அவர் சுட்டிக் காட்டினார்.
பயணிகளின் தேவை அதிகரிப்பை தொடர்ந்து ராயாவிற்கு முன்பாக தாவாவ் நகருக்கு வாரத்துக்கு 16 விமான சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இந்த பாதைக்கான விமான சேவை அறிமுகப்படுத்தப்பட்ட போது வாரத்திற்கு 7 விமான சேவைகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
குறிப்பாக விழா காலங்களில் தேவை அதிகரிப்பின் காரணமாக பாத்திக் ஏர் தனது விமான சேவைகளை அதிகரித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
விழா காலங்களில் தங்கள் இல்லங்களுக்கு திரும்பும் பயணிகளுக்கு நிறைவான பயண சேவையை வழங்குவதே எங்களது குறிக்கோள் என அவர் சொன்னார்.
இந்த விழா காலத்தில் 140 கூடுதல் விமான சேவைகளை பாத்திக் ஏர் வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார்.

கோத்தா பாரு, அலோர் ஸ்டார், பினாங்கு, கோத்தா கினபாலு,சிபு,கூச்சிங்,சான்டகான் மற்றும் இன்னும் பல நகர்களுக்கு இந்த கூடுதல் விமான சேவைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
விழா காலங்களில் பயணிகள் தடையின்றி தங்கள் ஊர்களுக்கான பயணத்தை மேற்கொள்வதை உறுதி செய்வது பாத்திக் ஏரின் நோக்கமாகும் என அவர் தெரிவித்தார்.
இந்த விழா காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணமாக சரவாக்கிற்கு அனைத்தும் அடங்கிய ஒருவழி பயண கட்டணம் வெ 319 மற்றும் சபாவிற்கு அனைத்தும் அடங்கிய ஒரு வழி பயண கட்டணம் வெ 379 வழங்கப்படுகிறது.
பாத்திக் ஏர் விமானங்கள் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் மற்றும் சுபாங் சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா விமான நிறுவனங்களில் செயல்படுகிறது.
உங்களின் அடுத்த பயணத்தை முடிவு செய்ய பாத்திக் ஏர் கைபேசி செயலி அல்லது www.batikair.air அகப்பக்கத்தில் வலம் வரலாம்.


