
பெட்டாலிங் ஜெயா மார்ச் 27
மஸ்ஜிட் இந்தியாவில் உள்ள தேவி ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தின் நிலத்தை போல், எத்தனை நிலங்கள் ஜேக்கல் நிறுவனத்திற்கு கைமாறியுள்ளது என பெர்சாத்து கட்சியின் மலாய்காரர்கள் அல்லாதவர் பிரிவின் உதவி தலைவர் டத்தோஸ்ரீ சஞ்சீவன் ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.
சுமார் 130 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தின் நிலத்தை, ஆலய நிர்வாகத்தின் ஒப்புதல் இன்றி ஜேக்கல் நிறுவனத்திற்கு கோலாலம்பூர் மாநகர் மன்றம் தாரை வார்த்து கொடுத்து விட்டதாக அவர் சாடினார்.
இந்த நடப்பு அரசாங்கம் இந்தியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவில்லை என்பது தான் உண்மை என அவர் சொன்னார்.
இது போன்ற அநீதிகளுக்கு முடிவு கட்டுவோம் என்று தான் இந்த நடப்பு அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.
ஆனால் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தலை மேலான மடானி அரசாங்கமும், முன்னாள் அரசாங்கம் செய்த தவறுகளை தொடர்வதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த ஆலய நில விவகாரத்தில் கோலாலம்பூர் மாநகர் மன்றம் ஜேக்கல் நிறுவனத்துடன் ரகசிய பேச்சு வார்த்தைகளை நடத்தி, இந்தியர்களின் உரிமையை பறித்து விட்டதாக அவர் சாடினார்.
130 காலம் பழமை வாய்ந்த இந்த நிலத்தை விற்க, முதல் வாய்ப்பை இந்த ஆலயத்தின் நிர்வாகத்திற்கு தான் கோலாலம்பூர் மாநகர் மன்றம் வழங்கி இருக்க வேண்டும்.
ஆனால் ஆலய நிர்வாகத்தை கலந்தாலோசிக்காமல் ஜேக்கல் நிறுவனத்திற்கு இந்த நிலத்தை கோலாலம்பூர் மாநகர் மன்றம் விற்று விட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த விவகாரத்தில் இந்திய சமூகத்தினர் நடப்பு அரசாங்கத்தின் மீது மிக அதிருப்தியை கொண்டுள்ளனர்.
இந்து ஆலயங்கள் சம்பந்தப்பட்ட நில விவகாரத்தில் அரசாங்கம் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என அவர் நினைவுறுத்தினார்.


