Tuesday, April 21, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

அனைத்து விமானங்களிலும் பவர் பேங்க் பயன்படுத்த ஏர் ஆசியா தடை விதித்துள்ளது

தனது அனைத்து விமானங்களிலும் பவர் பேங்க் பயன்படுத்துவதற்கு ஏர் ஆசியா தடை விதித்துள்ளது.
விமான பயணத்தின் போது பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த புதிய பவர் பேங்க் கொள்கை வரும் 2025 ஏப்ரல் 1 ஆம் தேதி நடைமுறைக்கு வருகிறது.
அனைத்துலக விமான போக்குவரத்து பாதுகாப்பு தரத்திற்கு ஏற்ப விமான பயணங்களின் போது பேட்டரி தொடர்பான ஆபத்து சம்பவங்களை குறைக்க இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது.
விமான நிறுவனத்தின் கொள்கைக்கு ஏற்ப நிலயத்தை வந்தடைவதற்கு முன்னர் பயணிகள் இந்த பவர் பேங்க் நடைமுறை குறித்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.
100(Wh) அல்லது 20,000(mAh) கூடுதலான பவர் பேங்க்குகளை கொண்டு செல்ல பயணிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

  • பவர் பேங்க்குகள் சீட் பொக்கெட் அல்லது இருக்கைக்கு அடியில் வைக்கப்பட வேண்டும்.
  • பவர் பேங்க்குகள் பொருட்கள் வைக்கப்படும் மேல் தளத்தில் வைக்க அனுமதிக்கப்படாது.
  • விமான பயணத்தின் போது பவர் பேங்க்குகளை பயன்படுத்த அனுமதி கிடையாது.
  • விமான பயணத்தின் போது இதர மின்சார கருவியில் பவர் பேங்க்கை சார்ஜ் செய்ய அனுமதி இல்லை.
  • செக்-ன் பேக்கெஜில் பவர் பேங்க்குகளை வைக்க அனுமதி இல்லை. விமானத்திற்குள் கைப்பற்றியல் பவர் பேங்க்குகளை கொண்டு செல்ல அனுமதி உண்டு.

இந்த நிபந்தனைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய செக்-இன் கவுண்டர்களில் பாதுகாப்பு நினைவுறுத்தல்கள் வைக்கப்பட்டிருக்கும்.
விமானங்கள் புறப்படுவதற்கு முன்பாக இந்த நிபந்தனைகள் குறித்து அறிவிப்புகள் செய்யப்படும்.
விமானங்கள், பயணிகள், சிப்பந்திகள் ஆகிய தரப்பினரின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த உயர்நிலை பாதுகாப்பு தரத்தை ஏர் ஆசியா கடைப்பிடிக்கும்.
அனைவரின் பாதுகாப்பான பயணத்திற்கு பயணிகளின் ஒத்துழைப்பை ஏர் ஆசியா பாராட்டுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular