
உலக கிண்ண கால்பந்து போட்டியின் தகுதி சுற்று ஆட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் வெற்றி பெற்றனர்.
சென்தேனிரோ அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் உருகுவே அணியை சந்தித்து விளையாடினர்.
இரு முன்னணி அணிகள் மோதியதால் மிகுந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஆட்டம் தொடங்கியது.
இதில் அர்ஜெண்டினா அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் உருகுவே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றன.
அர்ஜெண்டினா அணியின் வெற்றி கோலை தியாகோ அல்மாண்டா அடித்தார்.
மற்றொரு ஆட்டத்தில் ஈக்குவடோர் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் வெனிசூலா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.


