
செனாய் மார்ச் 20
தங்களின் வாழ்க்கையில் வெற்றி நடை போட்டுள்ள பெண்களை பாராட்டும் வகையில் 2025 காந்த சாதனை பெண் நிகழ்வு இங்குள்ள செனாய் இம்பியானா ஹோட்டலில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த பெண்களை பாராட்டும் வகையில் கோல்டன் எம்பாயர் மிடியா இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது.

இந்த நிகழ்ச்சியை வெற்றியடைய செய்யும் வகையில் சுல்தானா ரோகாயா அறக்கட்டளை வெ 3,000 வழங்கியது.
இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் மேலவை உறுப்பினர் புவான் ஸ்ரீ டத்தின் சரசா பாசமாணிக்கம் மற்றும் மீவா தலைவர் டத்தோ புருஷோத்மன் ஆகியோர் சிறப்பு பிரமுகர்களாக கலந்து கொண்டனர்.


