Tuesday, April 21, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

2024 மலேசிய ஊடக மன்ற மசோதா மேலவையில் நிறைவேற்றப்பட்டது

கோலாலம்பூர் மார்ச் 20
2024 மலேசிய ஊடக மன்ற மசோதா மேலவையில் நிறைவேற்றப்பட்டதாக தொடர்பு துறை துணையமைச்சர் தியோ நீ செங் கூறினார்.
இரண்டாம் வாசிப்பிற்கு தாம் தாக்கல் செய்த இந்த மசோதா 17 செனட்டர்களின் விவாதத்திற்கு பிறகு பெரும்பான்மை வாக்குகளில் நிறைவேற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த மன்றத்தின் ஆண்டு பொதுக்கூட்டத்தில் ஒரு நடத்தை நெறிமுறை நிறைவேற்றப்பட வேண்டும் என அவர் சுட்டிக் காட்டினார்.
அரசாங்கத்தின் தலையீடு இன்றி இந்த மன்றம் சொந்த விதிமுறைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என கூலாய் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.

‘ஊடக மன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்படுவதை நாங்கள் வரவேற்கிறோம்’ என்றார் அவர்.
தனது விசாரணைகளில் பங்கெடுக்க தனிநபர், உறுப்பினர் அல்லது உறுப்பினர் அல்லாத எவரையும் அழைக்க மலேசிய ஊடக மன்ற குழுவிற்கு அதிகாரம் இருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.
ஒரு செய்தி நெறிமுறை அற்றதாக கருதப்பட்டால் போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது சம்பந்தப்பட்ட தனிநபரின் ஊடக அங்கீகார அட்டையை தகவல் இலக்க ரத்து செய்ய வேண்டும் என்ற அதிகாரம் இந்த குழுவிற்கு இருக்கிறது என அவர் தெளிவுபடுத்தினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular