
பெட்டாலிங் ஜெயா மார்ச் 19
எதிர்வரும் மே மாதம் நடைபெறுவதற்கும் கட்சியின் தேர்தலில் உதவித் தலைவர் பதவிக்கு பிகேஆர் தகவல் பிரிவு தலைவர் ஃபாமி பாட்சில் போட்டியிடுகிறார்.
உதவித் தலைவராக தாம் தேர்ந்தெடுக்கப்பட்டால் கட்சிக்கு இன்னும் கூடுதலான சேவைகளை வழங்க முடியும் என தொடர்பு துறை அமைச்சருமான அவர் சொன்னார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பிகேஆர் லெம்பா பந்தாய் தொகு தலைவராக ஃபாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த 2022 ஆம் ஆண்டில் நடைபெற்ற கட்சி தேர்தலில் ஃபாமி உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வி கண்டார்.
உதவித் தலைவர் பதவியை தற்காக்க தாம் மீண்டும் உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதாக நூருல் இஸா அன்வார் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


