
ஒழுக்க விழுமியங்களையும், நற்பண்புகளையும் ஊக்குவிக்கும் விதமாக மலேசிய இந்து சங்கம், ஜொகூர் மாநில ஏற்பாட்டில் நன்னெறி விழா 08-03-225 சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு பத்து பகாட், உயர் தொழில்நுட்ப பயிற்சி மையத்தில் இனிதே நடைபெற்றது. சுல்தானா ரொகாயா அறவாரியத்தின் தலைவர் சார்ஜன் டத்தோ சுகுமாரன் ராமன் காலை விழா நிகழ்வை இனிதே துவக்கி வைத்தார். அவர் தமதுரையில் மலேசிய இந்து சங்கம், ஜொகூர் மாநிலம் 27 ஆண்டுகளாக இவ்விழாவை செம்மையாக நடத்தி வருவதற்கும் சமயத்தோடு நன்னெறி கல்வியினை மாணவர்களுக்கு இப்போட்டியின் வாயிலாக ஊட்டி வருவதற்கும் மனமார பாராட்டியதுடன் ரி.ம. 10,000.00 வெள்ளிக்கான காசோலையையும் வழங்கி சிறப்பு செய்தார்.

மேலும் ஏற்பாட்டுக் குழு தலைவர் திருமதி எஸ். திலகவதி, கல்லூரி ஒருங்கிணைப்பாளர் உயர்திரு எஸ். காந்தன் ஆகியோருக்கு சிறப்பு செய்ததுடன் மாநில சமயப் பிரிவு தலைவர் தொண்டர்மணி மு.மோகனதாசுக்கு “சிறந்த கவிஞர்” விருது வழங்கி சிறப்பித்தார். பரிசளிப்பு விழாவில் கலந்துக் கொண்ட மாநிலத் தமிழ்ப்பள்ளி கண்காணிப்பாளர் உயர்திரு இரா.இரவிச்சந்திரன் மற்றும் தேசிய துணைச் செயலாளர் உயர்திரு மு.மகேந்திரன் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளித்துப் பாராட்டினர். முன்னதாக மாநில செயலாளர் தொண்டர்மணி க.விஜயன் வரவேற்புரை ஆற்றி விழா சிறப்பாக நடைபெற சேவையாற்றியவர்ளை பட்டியலிட்டு நன்றி நல்கினார்.


