
தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் அளவிலான 2025 மகளிர் தின கொண்டாட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த கொண்டாட்டத்தில் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் டத்தோ ஆரோன் ஆகோ டாகாங் மற்றும் அதன் துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி முக்கிய பிரமுகர்களாக கலந்து கொண்டனர்.

பெண்களின் அர்ப்பணிப்பை பாராட்டும் வகையில் இந்த மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
ஒருமைப்பாட்டு அமைச்சின் அளவில் தங்களின் அர்ப்பணிப்பை பாராட்டு வகையில் பலருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
இந்நாட்டின் வளர்ச்சிக்கும் மேற்பாட்டிற்கும் மகளிரின் பங்கு அளப்பரியது என செனட்டர் சரஸ்வதி கூறினார்.
பெண்கள் அனைத்து துறைகளிலும் தங்களின் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
குடும்பத்திற்காகவும் நாட்டுக்காகவும் மகளீரின் பங்கு மற்றும் அர்ப்பணிப்பை நாம் மறந்து விடக்கூடாது என அவர் குறிப்பிட்டார்.



