
இங்குள்ள ஸ்ரீ சிவ முனீஸ்வரர் தேவஸ்தானத்தில் தங்கரத திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த தங்கரதம் தம்போய் நகரை வலம் வந்து ஸ்ரீ சிவ முனீஸ்வரர் தேவஸ்தானத்தை வந்தடைந்தது.
நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்களதுடன் ஆலயத்தை வந்தடைந்தனர்.
இந்த தங்கரத திருவிழாவில் ஜொகூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ராவின் குமாரின் சிறப்பு அதிகாரி சுப்பிரமணியம் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார்.
இந்த விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு ஆலய தலைவர் கருப்பையா நன்றி தெரிவித்துக் கொள்கிறார்.
சிறப்புப் பிரமுகராக கலந்து கொண்ட சுப்பிரமணியம் பாலகிருஷ்ணனுக்கு ஆலய தலைவர் கருப்பையா சிறப்பு செய்தார்.



