Thursday, April 16, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

ஹாரி ராயாவிற்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களில் 16,000 இருக்கைகளை ஏர் ஆசியா வழங்குகிறது

செப்பாங் பிப் 27
எதிர்வரும் ஹாரி ராயா கொண்டாட்டத்தை முன்னிட்டு நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களில் சுமார் 16,000 இருக்கைகளை ஏர் ஆசியா வழங்குகிறது.
தீபகற்ப மலேசியா மற்றும் கிழக்கு மலேசியாவிற்கிடையே 90 பின்னிரவு விமானங்களுக்கு இந்த நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்கள் வழங்கப்படுகிறது.
எதிர்வரும் 28 மார்ச் 2025 முதல் ஏப்ரல் 2025 வரை நிர்ணயிக்கப்பட்ட வெ 328 ஒரு வழி பயண கட்டணத்தில் கோலாலம்பூர் மற்றும் கூச்சிங்,சிபு, பிந்துலு அல்லது மீரி மேலும் ஜொகூர் பாரு மற்றும் கூச்சிங் நகர்களுக்கு பயணிகள் சிறகடிக்கலாம்.
இதனிடையே கோலாலம்பூர் மற்றும் கோத்தா கினபாலு,சான்டகான் அல்லது தாவாவ் ஆகிய நகரங்களுக்கிடையே மற்றும் ஜொகூர் பாரு மற்றும் கோத்தா கினபாலு நகரங்களுக்கிடையே நிர்ணயிக்கப்பட்ட வெ 388 ஒரு வழி பயண கட்டணத்தில் பயணிகள் சிறகடிக்கலாம்.
தீபகற்ப மலேசியா மற்றும் கிழக்கு மலேசியாவிற்கிடையே 10 நகரங்களுக்கு ஏர் ஆசியா நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை வழங்குகிறது.
அரசாங்கத்தின் கொண்டாட்ட கால முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் சபா, சரவாக் மற்றும் லாபுவானுக்கு வழக்கமான கட்டணங்களில் வாரத்திற்கு 287 விமான சேவைகளை ஏர் ஆசியா மேற்கொள்ளும்.
இதனிடையே மலேசியர்களுக்கும் விமான கட்டணம் ஏற்புடையதாக இருப்பதை அரசாங்கம் உறுதி செய்யும் என போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் கூறினார்.


தீபகற்ப மலேசியா மற்றும் கிழக்கு மலேசியாவிற்கிடையே பயணிக்கும் மாணவர்களின் சுமைகளை குறைக்க அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக அவர் சொன்னார்.
இதன் அடிப்படையில் ஏர் ஆசியா போன்ற விமான நிறுவனங்களுடன் அரசாங்கம் கைகோர்த்து வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
ஏர் ஆசியாவின் இந்த நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் நடவடிக்கையை தாம் பாராட்டுவதாக அவர் சொன்னார்.
இதனிடையே ஹாரி ராயா கொண்டாட்டத்தில் குடும்ப உறுப்பினர்கள் ஒன்றிணைவது எவ்வளவு அவசியமான ஒன்று என்பதை தாங்கள் உணர்ந்துள்ளதாக ஏர் ஆசியா மலேசியா தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ கேப்டன் ஃபாரே மாஸ்புத்ரா கூறினார்.
இதன் காரணமாக தான் 16,000 நிர்ணயிக்கப்பட்ட கட்டண இருக்கைகளை ஏர் ஆசியா வழங்க முன் வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஏர் ஆசியா எவியேஷன் குழும நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி ஃபோ லிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular