
கோலாலம்பூர் பிப் 25
தேசிய ஒற்றுமை துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமிக்கு புது தற்காப்பு கௌரவ துணை ஆணையர் விருது வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கும் நிகழ்வு இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
12 பேர் இந்த கௌரவ விருதுக்கான நியமன கடிதங்களை பெற்றனர்.
இந்த கௌரவ விருதுகளை பொது தற்காப்பு படையின் ஆணையர் டத்தோ அமினுர்ராஹிம் முகமிட் வழங்கினார்.

மேலும் இந்த விருது வழங்கும் நிகழ்வை மக்களவை சபாநாயகர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஜொஹாரி அப்துல் பார்வையிட்டார்.
இதனிடையே தமக்கு இந்த கௌரவ விருதை வழங்கிய பொது தற்காப்பு படைக்கு செனட்டர் சரஸ்வதி கந்தசாமி நன்றி கூறினார்.
மேலும் இந்த கௌரவருதை பெற்ற அனைவருக்கும் அவர் பாராட்டுதலை தெரிவித்துக் கொண்டார்.


