Tuesday, April 21, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

ஜொகூரில் 71 தமிழ் பள்ளிகளுக்கு புத்தகப் பைகள்!

ஜொகூர் பாரு பிப் 24
ஜொகூர் மாநிலத்தில் உள்ள 71 தமிழ் பள்ளிகளின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு புத்தக பைகள் வழங்கப்பட்டன.
சுல்தானா ரோகாயா அறக்கட்டளையின் ஒத்துழைப்புடன் ஜொகூர் மஇகா இந்த புத்தகப் பைகளை வழங்கியது.
ஜொகூர் மாநில மஇகா தலைவரும் மாநில ஆட்சி குழு உறுப்பினருமான ரவீன் குமார் மற்றும் சுல்தானா ரோகாயா அறக்கட்டளையின் தலைவர் டத்தோ சுகுமாரன் இந்தப் புத்தக பைகளை வழங்கினார்.


துன் ஹமினா தமிழ் பள்ளி மற்றும் தாமான் முத்தியாரா ரினி தமிழ் பள்ளிகளுக்கு இவர்கள் வருகை புரிந்து புத்தகப் பைகளை வழங்கினார்.
இந்த உதவி பெற்றோர்களின் சுமைகளை சற்று குறைக்கும் என தாம் நம்புவதாக ரவீன் குமார் கூறினார்.
மேலும் இம் மாநிலத்தில் உள்ள தமிழ் பள்ளிகளின் நலன்களில் ஜொகூர் மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹபிஸ் அதிக கவனம் செலுத்தி வருவதாக அவர் சொன்னார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular