
நான்கு போலிஸ் அதிகாரிகளை பாராங் கத்தியால் தாக்கியவர் மருத்துவமனையில் மரணமடைந்தார்.
இந்த சம்பவம் சுங்கைப்பட்டாணி தாமான் ஸ்ரீ உட்டாவில் நிகழ்ந்தது.
வன்முறையில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்யும் போது தாக்கப்பட்டதில் நான்கு போலிஸ் அதிகாரிகள் காயமடைந்தனர்.
கோலா மூடா மாவட்ட போலிஸ் தலைவர் வான் அசாருதீன் வான் இஸ்மாயில் கூறுகையில்,
32 வயது நபரைக் கைது செய்யும் பணியின் போது சந்தேக நபர் பாராங் கத்தியால் போலிசாரைத் தாக்கினார்.
இதனால் போலீசார் அவரை கட்டுப்படுத்தும் முயற்சியில் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
காயம்பட்ட அனைத்து காவல்துறை அதிகாரிகளும் 30 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள்.
அவர்களின் தலை, கைகள், தோள்கள், இடுப்புப் பகுதிகளில் காயம் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.
இந்த சம்பவத்தில் பாராங் கத்தியால் தாக்கியவர் மருத்துவமனையில் மரணமடைந்தார் என்று அவர் கூறினார்.


