Tuesday, April 21, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

ஏர் ஆசியா வழங்கும் 15 மில்லியன் ஊக்குவிப்பு கட்டண இருக்கைகள்!

ஜொகூர் பாரு பிப் 15
ஏர் ஆசியாவின் இலவச இருக்கைகள் 2 நாள் பிரச்சாரம் இங்கு சிட்டி ஸ்குவேர் பேரங்காடியில் தொடங்கியது.
130 நகரங்களுக்கு 15 மில்லியன் ஊக்குவிப்பு கட்டண டிக்கெட்டுகளை ஏர் ஆசியா வழங்குகிறது.
2016 மலேசியாவிற்கு வருகைப் புரியும் ஆண்டை முன்னிட்டு மலேசியா சுற்றுலாத்துறை மேற்கொண்டுள்ள பிரச்சாரத்திற்கு உறுதுணையாக இந்த 15 மில்லியன் ஊக்குவிப்பு கட்டண டிக்கெட்டுகள் பிரச்சாரத்தை ஏர் ஆசியா மேற்கொண்டுள்ளது.
மலேசியாவில் ஜொகூர் பாரு,மீரி,பிந்துலு,சாண்டகான் உட்பட இன்னும் பல நகரங்களுக்கு வெ 39 கட்டணத்திலிருந்து ஊக்குவிப்பு கட்டண டிக்கெட்டுகளை பயணிகள் வாங்கிக் கொள்ள பொன்னான வாய்ப்பு இதுவாகும்.
அதே வேளையில் அனைத்தும் அடங்கிய வெ 75 ஒரு வழி கட்டணத்தில் சிங்கப்பூர், டா லாட் மற்றும் புக்கெட் நகர்களை பயணிகள் சுற்றி பார்க்கலாம்.
மேலும் ஏர் ஆசியா எக்ஸில் கோலாலம்பூரிலிருந்து அனைத்தும் அடங்கிய வெ 359 ஒரு வழி பயண கட்டணத்தில் சாங்ஜா,பெர்த்,அல்மாட்டி மற்றும் நைரேபி போன்ற அற்புத நகரங்களுக்கு பயணித்து அனுபவத்தை பெறலாம்.


இதனிடையே இந்த ஆண்டை புத்துணர்ச்சியுடன் தொடங்க இந்த 15 மில்லியன் ஊக்குவிப்பு கட்டண பிரச்சாரத்தை ஏர் ஆசியா மேற்கொண்டுள்ளதாக ஏர் ஆசியா எவியேஷன் குழும நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவு தலைவர் அமான்டா வூ கூறினார்.
இந்த ஆண்டின் பகுதி ஆண்டில் பயணிகள் தங்களின் விடுமுறையை திட்டமிட இந்த ஊக்குவிப்பு கட்டணம் மிகவும் உதவும் என அவர் சொன்னார்.
2026 மலேசியாவிற்கு வருகை புரியும் ஆண்டின் அரசாங்கத்தில் இலக்கை அடைய ஏர் ஆசியா துணை நிற்கும் என்றார் அவர்.
நாட்டின் சுற்றுலாத் துறையை வலுப்படுத்த ஏர் ஆசியா முக்கிய பங்காற்றுமென அவர் சொன்னார்.
2026 மலேசியாவிற்கு வருகை புரியும் ஆண்டையோட்டி 35.6 மில்லியன் சுற்றுப்பயணிகளை கவர ஏர் ஆசியா இலக்கை கொண்டுள்ளதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இப்பொழுது முதல் 23 பிப்ரவரி 2025 தேதிக்குள் airasia.com அல்லது AirAsia MOVE செயலி வழி ஊக்குவிப்பு கட்டண டிக்கெட்டுகளை பயணிகள் வாங்கிக் கொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular