
கோலாலம்பூர் பிப் 9
எந்தவொரு விசாரணையுமின்றி தடுப்பு காவல் வைக்கப்பட்டுள்ள 32 சோஸ்மா கைதிகளை சந்திக்க அவர்களின் குடும்ப உறுப்பினர்களை அனுமதிக்கும்படி கெராக்கான் கட்சியின் தேசிய உதவி தலைவர் டத்தோ க. பரமேஸ்வரன் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
விசாரணயின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த கைதிகள் தங்களை தற்காத்துக் கொள்ள வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றார் அவர்.
சுங்கை பூலோ சிறைச்சாலைக்கு வெளியே நேற்று முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள இந்த கைதிகளின் குடும்பங்களுக்கு நடப்பு அரசாங்கம் முறையான விளக்கத்தை தர வேண்டும் என்றார் அவர்.
இந்த 32 கைதிகள் கைது செய்யப்பட்ட நாள் முதல் இது வரை இவர்களின் நிலைமை என்ன என்பதை சிறைச்சாலை இலக்கா கண்டும் காணாமல் இருந்து வருவதாக அவர் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் உள்துறை அமைச்சு மற்றும் சிறைச்சாலை இலக்கா விவேகமாக நடந்து கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
சம்பந்தப்பட்ட கைதிகளை வார இறுதியில் குடும்ப உறுப்பினர்கள் பார்வையிடும் நிகழ்வை சுங்கை பூலோ சிறைச்சாலை அனுமதிக்காதது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த கைதிகளை விசாரணைக்கு கொண்டு வரப்பட வேண்டும். மேலும் இவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இவர்களின் நிலை என்பதை சுங்கை பூலோ சிறைச்சாலை குடும்ப உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
இந்த கைதிகளின் விவகாரத்தில் அரசாங்கம் மனிதாபிமான போக்கை கடைப்பிடிக்க வேண்டும்.
உள்துறை அமைச்சு மற்றும் சிறைச்சாலை இலக்கா இந்த விவகாரத்தில் விரைந்து செயல்படும்படி அவர் வலியுறுத்தினார்.


