
தெப்ராவ் பிப் 3
தெப்ராவ்,பாண்டார் டத்தோ ஓன் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் 2ஆவது மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடந்தேறியது.
இந்த கும்பாபிஷேக கொண்டாட்டத்தில் சுமார் 4,000 பக்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இந்த கும்பாபிஷேக விழாவில் ஜொகூர் மஇகா தலைவரும் மாநில ஆட்சி குழு உறுப்பினர் ரவீன் குமார், ஜொகூர் மாநில போலீஸ் படை தலைவர் டத்தோ குமார் மற்றும் YSR தலைவர் சுகுமாரன் சிறப்பு பிரமுகர்களாக கலந்து கொண்டனர்.
இந்த கும்பாபிஷேக கொண்டாட்டத்தில் பல சிறப்பம்சங்கள் நடந்தேறியது.

இந்த கும்பாபிஷேகம் சிறப்புடன் நடைபெற பக்தர்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியதாக ஆலய தலைவர் முனியாண்டி கூறினார்.
இந்த கொண்டாட்டம் பாதுகாப்புடன் நடைபெற அரச மலேசிய போலீஸ் படை அனைத்து உதவிகளையும் செய்ததாக அவர் குறிப்பிட்டார்.
கும்பாபிஷேக கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நண்பகல் உணவு வழங்கப்பட்டதாக அவர் சொன்னார்.


