
தேங்காய் பற்றாக்குறையால் பல தலைமுறையாக பின்பற்றப்படும் பாரம்பரியத்தை நாம் தடை செய்ய முடியது.
மஹிமா தலைவர் டத்தோ ந. சிவக்குமார் இதனை வலியுறுத்தினார்.
உலகெங்கிலும் உள்ள இந்துக்களுக்கு தைப்பூசம் ஒரு முக்கியமான பண்டிகையாகும்.
இது ஒரு வாரம் கொண்டாடப்படும் ஒரு முக்கியமான பண்டிகையாகும்.
இந்நிலையில் தைப்பூச கொண்டாட்டத்தின் போது தேங்காய்களைப் பயன்படுத்துவது குறித்து பினாங்கு மாநில முதலமைச்சர் சாவ் கோன் இயோவ் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை அபத்தமானது.
ஆகஸ்ட் 2024 முதல் தேங்காய் விநியோகப் பற்றாக்குறையின் சிக்கலை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
தைப்பூச விழாவின் போது தென்னை பற்றாக்குறை என்பது ஒரு புதிய பிரச்சினை அல்ல.
மேலும் தேங்காய்களின் விலை 3.50 ரிங்கிட்டாக உயர்ந்ததால்தான் இந்தோனேசியாவிலிருந்து தேங்காய்களை இறக்குமதி செய்யப்படுகிறது.
ஆகஸ்ட் மாதத்திலிருந்து மலேசியாவில் தேங்காய் பற்றாக்குறை நிலவுகிறது என்பது உண்மைதான்.
ஆனால் இந்த முக்கியமான இந்து விழாவின் போது இந்தப் பிரச்சினையை எழுப்புவது பொருத்தமற்றது.
இந்துக்கள் வேண்டுமென்றே, தேங்காய்களை உடைப்பது இல்லை.
இந்துக்கள் பிரார்த்தனைகளில் தேங்காய்களைப் பயன்படுத்துகிறார்கள். ஏனெனில் அவை புனிதமான காணிக்கையாகக் கருதப்படுகின்றன.
இது தூய்மை, மிகுதி, நல்ல அதிர்ஷ்டத்தைக் குறிக்கிறது.
ஆகையால் தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றப்படும் தேங்காயைப் பயன்படுத்துவதில் என்ன தவறு?.
ஆகவே அரசாங்கம் விவசாயப் பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க முன்முயற்சி எடுக்க வேண்டும்.
புதியதாக ஒன்றைச் செய்ய வேண்டும் என மக்களை நோக்கி விரல் நீட்டக்கூடாது என்று டத்தோ சிவக்குமார் கூறினார்.


