Sunday, April 19, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

தைப்பூச கொண்டாட்டத்திற்கு கெடா அரசாங்கம் வெ 53,000 நிதியுதவி

கோலாலம்பூர் பிப் 2
எதிர்வரும் தைப்பூச கொண்டாட்டத்தை முன்னிட்டு பாஸ் தலைமையிலான கெடா மாநில அரசாங்கம் வெ 53,000 நிதியுதவியை அறிவித்துள்ளது.
கூலிம் நகரத்தார் ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயம், சுங்கை பட்டாணி ஸ்ரீ சுப்பிரமணியர் தேவஸ்தானம் மற்றும் இந்து சங்கம் ஆகிய தரப்பினருக்கு இந்த நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
கெடா பாஸ் ஆதரவு பேரவையின் தலைவரும், கெடா மந்திரி பெசாரின் சிறப்பு அதிகாரியுமான பிகே குமரேசன் இதனை உறுதிப்படுத்தினார்.
இதனிடையே கெடா மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் சானுசியின் இந்த உதவிக்கு தேசிய பாஸ் ஆதரவு பேரவை நன்றி கூறியது.
பாஸ் தலைமையிலான கெடா மாநில அரசாங்கம் அனைத்து இனத்தவருக்கும் முன்னுரிமை வழங்கி வருவதை இந்த உதவி காட்டுவதாக தேசிய பாஸ் ஆதரவு பேரவை கூறியது.
பாஸ் ஒரு இனவாத கட்சி அல்ல என்பதை இது தரிப்பதாக அது கூறியது.
தைப்பூச கொண்டாட்டத்தையோட்டி கெடாவில் பொது விடுமுறையை டத்தோஸ்ரீ சானுசி அறிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular