
ஜப்பானில் கல்வி மேற்கொண்டு வரும் மலேசிய மாணவி நுரின் ஹன்னானி திங்கட்கிழ்மை முதல் காணாமல் போனதாக சொல்லப்பட்ட நிலையில் அவர் தோக்கியோவில் பத்திரமாக கண்டுப்பிடிக்கப்பட்டார்
தனது மகள் பத்திரமாகவும் நலமுடனும் இருப்பதாக ஜப்பானில் உள்ள மலேசிய தூதரக அலுவலகம் தகவல் அளித்ததாக அம்மாணவியின் தாயார் நூர் அஃப்ஸான் அப்துல் ரசாக் கூறினார்
மாணவி கண்டுப்பிடிக்கப்பட்டதாக காவல் நிலையத்தில் தகவல் அளிக்கும் பணிகள் நடந்து வருவதாகவும் தூதரகம் விளக்கம் அளித்தது
21 வயதாகும் நுரின் ஹன்னானி பொதுச்சேவை துறையின் உபகார சம்பள உதவியுடன் ஜப்பானில் கல்வி பயின்று வருகிறார் குறிப்பிடத்தக்கது


