Saturday, April 18, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

பட்டமளிப்பு விழாவை துணையமைச்சர் சரஸ்வதி தொடக்கி வைத்தார்

கோலாலம்பூர் ஜன 5
கூட்டரசு பிரதேச ஒற்றுமைத்துறை இலாக்காவின் பட்டமளிப்பு மற்றும் படைப்பு திட்டத்தை தேசிய ஒற்றுமை துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி தொடக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தங்களின் கல்வியை முடித்த செராஸ் மாவட்ட ஒற்றுமை பாலர் பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ்களை துணையமைச்சர் சரஸ்வதி வழங்கினார்.
சிறார்களின் சமூக ஆற்றலை மேம்படுத்த பங்களிப்பு வழங்கிய ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் நோக்கில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் தங்களின் பேச்சுத் திறன் ஆற்றலை வெளிப்படுத்தினர்.
இதனிடையே தங்கள் பிள்ளைகள் கல்வியில் மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்க பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் பங்கு மிக அவசியம் என துணையமைச்சர் சரஸ்வதி வலியுறுத்தினார்.


பிள்ளைகளின் எதிர்காலம் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் கையில் தான் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த விவகாரத்தில் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் அலட்சிய போக்கை கடைபிடிக்கக் கூடாது என அவர் நினைவுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் கூட்டரசு பிரதேச ஒற்றுமைத்துறை இலாக்காவின் இயக்குனர் டாக்டர் ஃபே சாங் சாவ் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular