
புத்ரா ஜெயா ஜன 4
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் 2025 ஆம் ஆண்டு புத்தாண்டு உரை நேரடி ஒளிபரப்பை தேசிய ஒற்றுமை துறை அமைச்சின் குழுமத்தினர் பார்த்து மகிழ்ந்தனர்.
புத்ரா ஜெயா கோம்ளேக்ஸ் F உள்ள பல்நோக்கு மண்டபத்தில் பிரதமரின புத்தாண்டு உரை நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இந்த நேரடி ஒளிபரப்பை தேசிய ஒற்றுமைத்துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி, தேசிய ஒற்றுமை துறை அமைச்சின் துணைத் தலைமை செயலாளர் முகமட் சொப்ரி, அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சின் சம்பந்தப்பட்ட அமைப்புகளின் அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மேலும் பிரதமரின் நேரடி உரையின் போது இவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.


